உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

63

என் நண்பனுக்காக நான் செய்ய முடியாத அளவு பெரிய காரியம் எதுவும் இல்லை. அவனுக்காக நான் செய்யக்கூடாத அவ்வளவு சிறு செய்தியும் எதுவும் இருக்க முடியாது.

ஸர் ஃவிலிப் ஸிட்னி.

38. இசை

யற்கையின் நான்காவது ன்காவது இன்றியமையாத் தேவை இசையே. முதலது உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது உறையுள், நான்காவது இசை.

போவீ.

மேதக்க எண்ணங்களை உள்ளத்தெழுப்ப, கடுஞ்சினங் கனிந்தெழும்படித் தூண்ட, அன்பைப் பெருக்க, மனிதரை இயக்கி ஆட்கொள்ளச் செய்ய, எதற்கும் இசையினும் அருந்திறல் வாய்ந்த மறைகலை இல்லை.

அடிசன்.

ஓவியக் கலையின் மிகப்பெரு நலிவு, அது உயர் ஒழுக்க உணர்ச்சியைத் தூண்ட முயலுவதில்லை என்பதே - இசை இதனைத் திறம்படச் செய்கிறது.

திருமதி ஸ்டோ.

எவ்வளவு வற்புறுத்தும் வாதங்களையும்விட எளிதாக மாந்தரைப் போரில் முன்னணிக்குத் தூண்டிப் போரிடச் செய்வதும்; எந்த அறிவுரையையும் விட, மக்களிடையே நாட்டுப் பற்றார்வத்தையும், செயலாக்கத்தையும் உண்டுபண்ணுவதும், படைத்துறை இசை, நாட்டுப் பாடல் ஆகியவையே.

டக்கர்மன்.

இசை மிக வியத்தகு புதுமை வாய்ந்த கலைப்பண்பு. அது செயல்துறைக்கும் நினைவுத் துறைக்கும் இடைப்பட்ட ஓர் இடையீடு - உள்ளத்துக்கும் புறப்பொருளுக்கும் இடை யிணைப்புச் செய்யும் ஓர் ஊடுவாயில். அது பொருளுமன்று, பொருட்பண்பு மன்று; புறத்துறையுமன்று, அகத்துறையு மன்று; பொருள் சார்ந்த தாயினும் பொருளன்று.

எச். ஹின்.