உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 41

சை பல வகையில் கவிதையோடொத்த கலை. இரண்டிலும் அறிவுத்திறத்தால் கற்பிக்க முடியா நுண்ணயங்கள் உண்டு. கலை யாட்சித் திறம்படைத்த கலைஞன் ஒருவனாலேயே அந்நயங்கள் ஆட்சிப்படமுடியும்.

போப்.

மற்ற எல்லாப் படைப்புக் கலைகளையும் போலவே, சைக் கலையும் அதனைப் படைக்கும் கலைஞனாகிய படைப்பாளனை விட ஆற்றல் வாய்ந்தது.

பீகவன்.

இசை ஒரு தடவை உள்ளத்தின் வாயிலைத் திறந்து உள் நுழைந்து விட்டால், அது அங்கே தனி உயிர் பெற்று விடுகிறது. பின் அது என்றும் இறவாது. அது ஓய்வொழிவின்றி நினைவுக் கூட்டத்தில் வாயில் இடைவாயில் வழிகளிலெல்லாம், ஊடாடிக்கொண்டே யிருக்கிறது.

புல்லர்.

அன்பு, அமைதி ஆகியவற்றின் குரல்களுள், இசையினும் மென்மையான, இனிமையான, திறம்படைத்த குரல் வேறு இல்லை.

எலிஹூபரிட்.

உயர் கலைகள் அனைத்திலும், உணர்ச்சியை இயக்கி யாளும் தன்மையுடைய கலை இசையே, சட்டமியற்றும் எவராலும் மிகுதியான ஆதரவுரதரத் தக்க கலை அது.

நெப்போலியன்.

39. கதையிலக்கியம்

நல்ல கதை, கேட்க இன்பமாயிருக்க வேண்டும்; மெய்யான தாகத் தோற்ற வேண்டும்; பொருத்தமுடையதாக, சுருக்க மானதாக, இன்னுரை புணர்ந்ததாக, புதிதாக இருக்க வேண்டும். இவ்வமைதி களிலிருந்து வழுவினால், அது அறிவிலிகள் பாராட்டைப் பெறலாம் அறிவுடையோருக்கக் கண்ணாய்வு மட்டுமே தரும்.

ஸ்டில்லிங்ஃவ்ளீட்,