உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

'நான்' என ‘அது' என விளக்கினார்

‘எனை” என ‘அதை' என முழக்கினார் 'மேரியன்பாடில்' சென் றிறந்தனர் காரிருட் கடலக மிதந்தனம்.

75

ஸ்டீவிஸ்மித்.

தனிப்பட்ட மனிதர் சமயம் :

தனக்கென எவருக்கும் ஒரு சமயம் இருக்க முடியுமென்பது தமக்கென ஒவ்வெருவருக்கும் ஒரு ஞாயிறு திங்கள் இருக்க முடியும் என்பது போன்றது ஆகும்.

48. நல்லுரைகள்

ஜி.கே. செஸ்டர்ட்டன்.

ஆர்வம் மிகுதி உடையவன், ஆனால் அமைதிவாய்ந்தவன்; உலகம் அவனுக்கே உரியது.

வில்லியம் மெக்ஃவாக்ஸ்.

தோல்வியென்பது வீழ்ச்சி யடையும்போது விழுவது

அல்ல; விழ அஞ்சி விழாது நிற்பதேயாகும்.

ஒரு பெரியார்.

உன் கைப்பிடிக் கயிற்றின் கோடிவரை சறுக்கி விட்டால், உடனே கயிற்றில் ஒரு முடிச்சிட்டு அதைப் பற்றித் தொங்கிக் கொள்.

அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்.

பிறர் காலடியிலிருந்து புல்லறுத்துக் காயவைத்துக் கொள்

பவனே திறமைசாலி.

ஒரு பெரியார்.

அந்தப் பேர்வழியிடம் காணக்கூடிய கருத்து ஒன்றே ஒன்று; அதுதான் அவற்றில் தவறான கருத்து.

அறிஞர் ஜான்ஸன்.

மௌனத்தைப் பற்றிய நம் மறைவாசகத்தைக் கார்லைல் மிகவும் அரும்பாடுபட்டுச் சுருக்கி, இறுதியில் முப்பது அழகிய ஏட்டுப் பகுதிகளாக உருவாக்கினார்.

மார்லிப் பெருமகனார்.