உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 41

நாம் வாழ்வது எதற்காக? நம் அயலார் வெட்டிப் பொழுது போக்குக்காக! அத்துடன் அவர்களையும் நம் பொழுதுபோக்காக ஆக்க!

ஜேன் ஆஸ்டன்.

உலகம் ஒரு பெரும் குமிழி; அதில் மனித வாழ்வு ஒரு சாணிலும் குறுகியது.

ஃவிரான்ஸிஸ் பேக்கன்.

அழுகையுடன் தொடங்கி அலறலுடன் முடிவுறும் இந்த வாழ்க்கையிடம் நமக்கு ஏன் இவ்வளவு பற்றுதல்?

மேரி வார்விக் கோமாட்டி.

வாழ்க்கை என்பது அழுகை, சிணுக்கம், சிரிப்பு ஆகிய வற்றின் கூட்டு. ஆனால் அதில் பெரும்பகுதி சிணுக்கம்தான்!

ஒரு பெரியார்.

பெரும்பாலும் வீரம் வேண்டுவது மாள்வதற்கல்ல.

வாழ்வதற்கே.

ஆல்ஃவியரி.

ஆடவர் வாழ்க்கையின் இயல்பை மிக முன் கூட்டி உணர்ந்து விடுகிறார்கள். பெண்களோ மிகப் பிந்தி உணர நேரிடுகிறது.

காதல் அணங்கனாய்! நீயும் நானும் சேர்ந்தால் காதொடு மூக்கிலாக் காசினியின் கூட்டையெல்லாம் மோதித் தகர்த்துத் துகளாக்கி அத்துகளைக்

ஆஸ்கார் ஒயில்டு.

காதல் உளநேர்வில் மீட்டுரு ஆக்குவமே.

ஒமார் கயாம்.

வதைப்பும் பதைப்பும் புதைபடும் வரை -அப் புதைப்புக்கும்

முன்னறிவுப்பு கிடையாது! மொத்தத்தில் இந்த வாழ்க்கைத்

திட்டம் ஒரு வேடிக்கையான திட்டம்தான்!

ஜார்ஜ். எம். கோஹன்.