உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

மனிதர் எவரும் தங்குதடையற்ற தன்னுரிமையுடைய ய வரல்லர் என்று தான் பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். ஆடவராயினும் சரி, பெண்டிராயுனும் சரி, யாவரும் தம்மைச்சூழ இருக்கும் மன்னுலக அமைப்புக்கு ஆட்பட்டவர்களே என்பது அவர்கள் எண்ணம். இது மிகவும் தவறு.மன்னுலக அமைப்புக்கள் எல்லாம் மனிதன் படைப்புகளே. அவற்றை ஆக்கியவனும் இயக்குபவனும் ஆள்பவனே அவனே.

வ்வமைப்புக்கள் சமய அமைப்புக்களாயிருக்கலாம். அரசியல்,சமுதாய அமைப்புகளாகவோ; வாணிக, தொழில்துறை அமைப்புக்களாகவோ இருக்கலாம். குடும்ப அமைப்பாயிருக்க லாம். பண்டை மரபுப் பண்பாயிருக்கலாம். அது எதுவாயினும். அதை ஆக்கிய மனிதனால் அதை அழிக்க முடியும், மாற்றவும் திருத்தவும், புதுப்பிக்கவும் முடியும். அதை மாற்றியமைத்து இயக்கவும் அவனால் கட்டாயம் முடியும்.

மனித வாழ்வையும் வாழ்வின் அமைப்பையும் சூழலையும் உண்டு பண்ணுபவன் மனிதன்; மனிதனை அவை உண்டு பண்ணுபவை அல்ல. இந்த உண்மையை அறியாதவனுக்கு, வாழ்வு புதிர்மயமானது. இடர் நிறைந்தது. மாறுபாடும் சுழற்சியும் உடையது. அதனிடையே அவனுக்கு, அமைதியும் பாதுகாப்பும் கிட்டுவது அரிதாகின்றது. என்றும் மாறுபடும் இவ் உலை விடையே மாறுபடா நிலவர அமைதியுடைய அடித்தளத்தை அல்லது ஓர் உறுதிப்பொருளைக் கண்டு கிட்டினாலல்லாமல், அவனுக்கு இன்பமும் அமைதியிம் உண்டாகாது.

அறிவியல், மெய்விளக்கம், சமயம் ஆகிய மூன்றும் அம்மூன்றின் பல துறைகளும், இவ்வடித்தளத்தை அஃதாவது உறுதிப்பொருளைத் தேடி அடைவதற்கான பலதிறப்பட்ட