உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

95

பொறுப்புடையவை என்று கருதுவது தவறு. அவை மனித விருப்பங்கள் கடந்தவையுமல்ல, மனிதரை அடக்குமுறை செய்யத்தக்கவையும் ஆகமாட்டா. ஏனெனில் அவற்றின் இயல்பும் ஆற்றலும் அமைப்பவரும் அமைப்பின் உறுப்பினரும் ஆன மனிதரின் உள்ளார்ந்த விருப்பங்களையும் முயற்சியையும் ஒத்துழைப்பையும் பொறுத்தவையேயன்றி வேறல்ல. அவை மனிதர் உள்ளார்ந்த விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றின் புறவடிவங்களேயாகும்.

மேலும் அவை சமூகமுறையில் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்தவை. கிட்டத்தட்ட ஒரே விருப்பமும் ஒரே மாதிரித் தேவைகளும் உடைய மக்களே ஒரு சமூகமாகச் செயலாற்றுகின்றனர். ஆனால் சில சமயம் ஒத்துழைப்பு அக ஒத்துழைப்பாய் இயல்பாகவே நடைபெறுகிறது. அமைப்பை தன்செயலுடையது போலத் தோன்றுவதன் காரணம் இதுவே. அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் இதை அறிந்தால், குறைகூறவே தேவை ஏற்படாது. அவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டால் அவர்கள் செயல் மாறுபாடு படிப்படியாக அமைப்பிலும் மாறுதல் கொண்டு வராமலிராது.

அமைப்புக்களை மனிதர் விரும்புவதாக் கூறலாம்;

வெறுப்பதாகக் கூறலாம். இவற்றால் அமைப்பில் மாறுதல் ஏற்படாது. ஏனென்றால் இவ்விருப்பங்கள் புற விருப்பங்களே. அமைப்பு எப்படியும் சமூகத்தின் செயல்துறை ஒத்துழைப்பைப் பொறுத்தது. ஆகவே அது தனிமனிதர் செயலையும், செயலுக்குக் காரணமான அகக் கருத்தையும், அகப் பண்புகளையே சாரும். அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் உண்மையாகவே தங்கள் அகக் கருத்தையும் அகப் பண்புகளையும் அவற்றுக்கேற்ப மாற்றியமைத்தால், அவர்கள் செயல் மாறும். பிறர் கருத்துக்களும் செயலும் அவ்வாறே நாளடைவில் மாறுபடும். புதிய அமைப்பு தானாகவே அமைந்துவிடும்.

வரலாற்றின் போக்கில் எவரது முனைத்த முயற்சியும் இல்லாமலே அமைப்புக்கள் இவ்வாறு தாமாக தாமாக மாறி வந்திருப்பதைக் காணலாம். இதனால் முனைப்பான முயற்சி வேண்டியதில்லை என்றோ, பயன்படுவதில்லை யென்றோ கொள்வதற்கில்லை. முனைப்பான முயற்சி மாறுபாட்டை