உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 41

விரைவு படுத்தக்கூடும். ஆனால் அதன் பயன் பெரிதும் மாறுதல் விரும்புவர் அகப்பண்பின் மாறுபாட்டையே பொறுத்திருக்கும்.

போலிக்கண்டனம்

நாவால் ஓரமைப்பை ஒருவன் உரக்கக் கண்டிக்கலாம். ஆயினும் அவன் உள்ளார அதன்மீது விருப்பமுடையவனா யிருக்கக்கூடும். ஏனெனில் அவன் கண்டித்துக் கொண்டே செயலில் அதைப் பின்பற்றுபவனாயிருப்பான். இச்சமயத்தில் அமைப்பு அவன் கண்டிப்பினால் பாதிக்கப்படாது. சமயத் துறையில் பழிகளை உரக்கக் கண்டித்துக் கொண்டே அப் பழிகளுக்கு இடந்தரும் புற நீர்மையாகிய போலிப் பண்புடையவர்களைக் காண்கிறோம். இதே போன்ற புற நீர்மை சமயமல்லாத பிற துறைகளிலும் நிலவுவதுண்டு.

எடுத்துக்காட்டாக, ஒப்பியல்வாதிகள்' பலர், பிறர் உழைப்பின் மீது சிறப்பாக ஏழைகள் உழைப்பின் மீது வாழும் சுரண்டல் முறையை வன்மையாகக் கண்டிப்பதை நாம் கேட் டிருக்கிறோம். அதே சமயம் அவர்கள் பொருளகங்களிலும் பிற தொழிலகங்களிலும்' பங்காளராயிருந்து பங்கூதியம் பெறத் தயங்கவில்லை. பங்கூதியம் என்பது, தான் உழையாது உழைப்பவர் வருவாயில் பங்கு பெறுதல் ஆகும் இது சுரண்டல் முறையில் ஒரு கூறு கைக்கொள்வதேயாகும். இங்ஙனம் பங்கூதியம் பெறுவதன் மூலம் இத்தகையோர் ஒருபுறம் சுரண்டல் முறையைக் கண்டித்துக் கொண்டே மறுபுறம் அதனுடன் ஒத்துழைத்து அம் முறையை வளர்க்கின்றனர். இது பற்றி அவர்களிடம் உசாவினால், அப்போதுதான் அவர்கள் தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க அமைப்பைக் குறை கூறுகின்றனர்.

"எங்களைச் சொல்லி என்ன செய்ய! எல்லாம் அமைப்பின் செயல். அமைப்பை மாற்றும் வரை நீங்கள் என்ன எசய்யமுடியும்? நான் என்ன செய்யமுடியும்? நாம் யாவருமே செயலற்றவர்கள். அமைப்பின பாரிய சக்கரங்களிடையே அரைபடும் சிறு தூசிகள் நாம்," என்று அவர்கள் போலி விளக்கம் தருகின்றனர்.

நாம் மேலே காட்டியபடி அமைப்பைக் குறைகூறும் முறை ஒரு மாயமுறை ஆகும். அமைப்பை மாற்றியமைக்கும் பொறுப்பும்