உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

97

ஆற்றலும் அதை அமைத்தவர்களான அமைப்பின் உறுப்பினர் களுக்கு உண்டு. ஆகவே உறுப்பினர் செயலற்றவர்கள், அதன் செயலுக்கு ஆட்பட்டவர்கள் என்று கூறுவதும் பொருந்தாது. அப்படியானால் அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர் அகக் கருத்து என்ன என்று பார்ப்போமானால், அவர்களை அறியாது அவர்கள் செயலும் எண்ணமும் முரண்படுவதன் காரணம் எளிதாக விளங்கும்.

அகக்கருத்து

அமைப்பைக் குறை கூறும்போதும் அதன்மீது பொறுப் பேற்றும் போதும், அவர்கள் உண்மையில் குறை கூறுவது அமைப்பின் உறுப்பினர் அனைவரையும் அன்று. தம்மை நீக்கி ஏனைய உறுப்பினர் அனைவரையுமே அவர்கள் குறை கூறுகின்றனர். அவர்கள் தாம் மாறுபட விரும்பவில்லை. பிறர் மாறுபட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

பிறரிடம் தீமையென்று கண்டிப்பதைத் தம்மிடம் நல்லது என்று அவர்கள் மனமார ஏற்கின்றனர். இதனால் ஏற்படும் அகக் கருத்து விளக்கத்தை அவர்கள் அவர்கள் கண்டால், அது மிகக் கோரமானது என்று அவர்களே ஒத்துக்கொள்வர். அவர்கள் சுரண்டலின் எதிரிகளல்லர். 'தம் சுரண்டலின்' எதிரிகளும் அல்லர். 'பிறர் சுரண்டலின்' எதிரிகள் மட்டுமே! அஃதாவது சுரண்டலில் பிறருடன் பங்கு கொள்வதுடன் அமையாமள், தாம் மட்டும் தனியுரிமையுடன் சுரண்டுடவைைத அவர்கள் உள்ளம் நாடுகிறது. இதனால் உண்மையில் அவர்கள் சுரண்டலைக் கண்டிக்காத பலரைவிடச் சுரண்டும் பண்புமிக்கவர்கள் ஆகின்றனர்!

சுரண்டுதலுக்கு உரிய அமைப்பைக் கண்டிக்க முற்படும் அவர்களே தான் அந்த அமைப்பைத் தம் அகப் பண்பால் ன்னும் உரமூட்டி வளர்ப்பவர்கள். சுரண்டலமைப்புக்குக் காரணமாயிருந்தவர்கள் அவர்கள் எதிரிகளல்லர், அவர்கள் முன்னோடிகளேயாவர்.

சுரண்டுதலமைப்பின் மீது போர் தொடுத்துக் கண்டனக் கணைகளை ஏவிக்கொண்ளே இத்தகையோர் அவ்வமைப்பின் தூண்களாயிருக்க முடிகிறது!