உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

இயற்கை, செயற்கை அமைப்புக்கள்

அப்பாத்துரையம் 41

அமைப்புக்கள் செயற்கை அமைப்புக்களாகவும் இருக்கலாம்; இயற்ைைக யமைப்புக்களாகவும் அமையலாம்.

செயற்கை அமைப்புக்கள் மனிதர் வரிந்து கட்டிக்கொண்டு புற முயற்சி மூலம் வெளிப்பட அமைத்தவை. புறமுயற்சியா லமைந்த இவ்வமைப்புக்களின் வலிமை புற முயற்சியாலோ அல்லது அக நீர்மையில்லாமையாலோ தகர்ந்துவிடத்தக்கவை. ஆனால் இயற்கையமைப்புக்கள் என்பவை தம்மையறியாமலே அகக் கருத்திலும் பண்பிலும் செயலார்வத்திலும் ஒன்று பட்டவர் கூடி ஒத்துழைப்பால் ஏற்படுபவை ஆகும். அகப்பண்பில் ஊன்றி அமைவதால் அவை மிகவும் வலுவுடையவை. அகப்பண்பே செயலார்வமாய்ச் செயற்படுவதனால், அவை செயல்துறையிலும் கட்டாயமான வெற்றி உடையவை.

இயற்கையமைப்புக்களின் வெற்றி தோல்விகள் மனித சமூகத்தின் வெற்றி தோல்விகள். மனித சமூகத்தையே மாற்றியமைக்கத் தக்க மாறுபாடுகளே அவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆயினும் தனிமனிதன் தன் அகப்பண்பு மூலம் சூழலை மாற்றியமைக்கலாம். அகக்கருத்து மாறுபாடு நாளடைவில் படிப்படியாகச் சூழலை மாற்றியமைக்க வல்லது ஆகும். அகக் கருத்து மாறுபடாத எந்தப் புறப்பண்பும், புற மாறுபாடும் இவ்வக அமைப்பைச் சிறிதும் தாக்காது.

அமைப்புக்குக் காரணமான பொது அகப் பண்பை மாற்ற விரும்புவோர் முதலில் தம் தனி அகப் பண்பை மாற்ற வேண்டும். அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் பிறர் கருத்தையே முதலில் மாற்ற எண்ணுகின்றனர். இதில்கூட அவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் அமைப்பைக் கூறுவதன் மூலம் எல்லார் பொறுப்பும் தட்டிக் கழிக்கப்பட நேரலாம். மேலும் ஒருவன் பிறரை மாற்ற விரும்புவது போலவே, ஒவ்வொருவரும் விரும்புவர். இதனால் எவரும் மாறுபட மாட்டார். சுரண்டலைக் கண்டிப்பவர் மனப்பான்மையாக வளர்கிறது.

அவர்கள் தாம் கண்டிக்கும் சுரண்டலைத் தாமே வளர்க்க உதவுபவர்களாகிறார்கள். அதுமட்டுமல்ல. அத்தகையயோரின் இயல்பான கூட்டுறவினாலேயே சுரண்டலமைப்பு நிலைநிற்கிறது.