உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

5

பண்புகளைவிட, கருத்திற் படாத அல்லது தீமைபோன்ற தோற்றத்திற் புதையுண்டு பெரு நன்மைக்கு வழிவகுக்கும் சிறு நுண் நலங்கள் அதனிற் பல. தோற்றங் கடந்து அவற்றின் விளைவும் பயனும் கண்டோர் விளக்கினாலன்றி, அவற்றின் மெய்த் திறமறிந்து பயன்பெறுதல் அரிது.

ம்.

சிறப்பாக, இளமைப் பருவம் உணர்ச்சிமிக்கது; ஆற்றல் மிக்கது; ஆர்வமிக்கது. இவற்றால் அஃது அருஞ் செயல்கள் செய்யும் திறமுடையது. அருஞ்செயல்களைச் செய்தும் வருகிறது. ஆனால், வாழ்க்கைக் களம் இளமைக்குப் புதிது; அதில் அது பழகித் தன் ஆற்றலை முன்னிலும் நற்றிறம்படப் பயன்படுத்துமுன், முதுமை வந்து விடுகிறது. இம் முதுமைப் போதில் உணர்ச்சி குன்றிவிடுகிறது; ஆற்றல் குறைந்து விடுகிறது. அறிவு வளரும் ஆற்றல்கூட ஒரு வகையில் மட்டுப்படுகிறது. ஆனால், அறிவு முதலீடு இப் பருவத்திலேயே மிகுதி. அத்துடன், அறிவுப் பரப்பின் அளவு மட்டுமன்றி அதன் கூறுகளின் தராதரமும் இப்போதுதான் தெளிவு பெறுகிறது. இவற்றை முதுமை தனக்கென முற்றும் பயன்படுத்த முடிவதில்லையாயினும், அது தன் ஆர்வத்தை இளமை வழிச் செயலாற்ற முயலுமானால், முதுமையின் அறிவுடன் இளமையின் உணர்ச்சியும் ஒருங்கிணைதல் கூடும். இளமையின் பயன் முதுமை என்பது உண்மையாதல்போல, முதுமையின் பயன் இளமை என்பதும் இங்ஙனம் உண்மை ஆகலாம். முதுமையின் அறிவை இளமையுடன் சேர்க்கும் இச்செயலுக்கே நாம் கல்வி, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல் என்ற பெயர்களைத் தந்து அழைக்கிறோம். இவை யாவும் பழைமை அல்லது முதுமையின் இன்கனிகள். இவையே புதுமைப் பயிரின் விதையாகவும் நல்லுரமாகவும் அமைகின்றன.

செல்கிறானென்று

காட்டு வழியே ஒருவன் வைத்துக்கொள்வோம். அவன் தான் செல்லும் பாதை இரு ரு பிரிவாகச் செல்வதைக் கண்டு தயங்குகிறான். அவன் செல்ல நாடும் இடத்துக்கு எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும் என்று அறிவது அவனுக்கு அச்சமயத்தின் இன்றியமையாத தேவை. அவ்விரண்டு பாதைகளுமே அவன் விரும்பும் இடத்துக்குச் செல்பவையாக இருக்கலாம். அப்போதும் அவனுக்கு எது நல்ல