||
2. வாழ்க்கையின் வாயிற்படி
கேள்வியாலறிந்த ஒருவர் வீட்டிற்சென்று அவரைப் பார்க்க முனைபவர், அவர் வீட்டு வாயிற்படி செல்லுமளவும் அவரைப் பற்றிய எவ்வகைக் கருத்தும் இல்லாமல் செல்லக் கூடும் ஆனால், வாயிற்படி அடைந்து உள்ளே பார்வையைச் செலுத்தியதும், "அவர் எப்படிப்பட்டவரோ, எப்படி வரவேற்பாரோ,” என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் எழுதுவது உறுதி. அதுபோலவே வாழ்க்கையின் வாயிற் படியாகிய பதினாலு, பதினைந்து வயதை அணுகிய எவரும், தம் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவோ, சிந்திக்கவோ, கவலைகொள்ளவோ செய்யாமல் இருக்க முடியாது. செல்வக்குடியில் பிறந்து, சோம்பேறி வாழ்வு வாழப் பழகிய ஒரு சிலர், இத்தகைய சிந்தனைக்கு ஆளாகாமலிருக்கலாம். ஆனால், சிந்தனைக்குரிய இந்தப் படியில் சிந்திக்காதவர், வாழ்க்கையில் என்றுமே சிந்திக்காதவராவார். சிந்தனையைக் கெடுத்த அவர் செவ்வாழ்வு அகன்ற பின் அவர் சிந்திக்கக் கூடும். ஆனால், செல்வத்தின் செல்வமட்டுமின்றி வாழ்க்கைக்கே செல்வமாகிய இளமையை இழந்த பின் அவர் சிந்தனையின் பயனும் வறுமையடைந்தே தீரும். எவ்வள வு
செல்வக்
குடியினராயினும் இவ்வாழ்க்கைப் படியில் சிந்தனைக்கு இடம் கொடாதவர், வாழ்க்கைப் பட்டியலில் தம் பெயர் பொறிக்காது விலங்கு போல் உண்டு உயிர்த்து ஒழிபவரேயாவர் அவர்கள் பிறந்தும் பிறவாதாரில் வைத்து எண்ணப்படத்தக்கவர்கள்.
வாழ்க்கையின் வாயிற்படியில் சிந்திப்பவருள்ளும், கனவு காண்பவருள்ளும் பலர் மேற்கூறிய சோம்பல் வாழக்கையாளர் வாழ்வையே குறிக்கோளாகக் கொள்வதுண்டு. இத்தகையோர் உழையாத வாழ்வை அவாவி அதன்பயனாக அண்டிப்பிழைக்கும் அடிமை வாழ்வையோ, அல்லது தகாத வழியில் பொருளீட்டி