உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

உழைப்பினும் அறிவுழைப்பைப்

நாம் கருதுவதில்லை.

11

பலர் மதித்து,

உடலுழைப்பைக் குறைவாய் எண்ணுவதுண்டு. இது கை கால்களையும் கண் காதுகளையும் புறக்கணித்து, மூளையை மதிப்பது போன்றதாம். கை கால்களால் நாம் உழைப்பதுடன் அவற்றினுதவியாலேயே நூலை எடுத்துப் படிக்கவும், கேட்கவும், எழுதவும் செய்கிறோம். அப்படியிருக்கக் கையால், கண் காதுகளில்லாமல், எப்படி மூளை வளர்ச்சி பெற முடியும் என்று உண்மை யாதெனில், கைகால் கண்காதுகளிலிருந்து சிறந்தன்றி மூளை சிக்காது, முன்னது அடிப்படைப் பண்பு; பின்னது சிறப்புப் பண்பு மட்டுமே. முன்னது இன்றியமையாதது; பின்னது அமைந்தால் தனிச் சிறப்புடையது. இது போலவே உடலுழைப்பு, உடல் நலம் ஆகியவை இன்றியமையா அடிப்படைத் தேவைகள் ஆகும். அறிவு இவற்றுடன் அமைந்தால் மட்டுமே சிறப்புடையது; அறிவற்ற உடலுழைப்பைப் போலவே, உடலுழைப்பற்ற அறிவும் சிறப்புடையதன்று.

மேலும் அறிவுழைப்புக்கு இயல்பாக எங்கும் தரப்படும் உயர்வுக்குக் கூட ஒரு தனிக்காரணமுண்டு. உடலுழைப்புப் பெரும்பாலும் தனக்கு மட்டுமே பயன்படத்தக்கது. தற்காலிகப் பயன் மட்டுமே உடையது. அறிவுழைப்போ பிறருக்குப் பெரிதும் பயன்படுவது; நிலையான நீடித்த பயனுடையது. அது மனிதருடைய உடலுழைப்பில் சிக்கனம் செய்து அதற்கு உரம் தருவது. எனவே அறிவுழைப்பு உடலுழைப்புக்கு எதிரானதன்று; அதன் மீது எழுப்பப்படுவது, அதற்கான உயர் மதிப்பும், அஃது உழைப்பை நீக்குவது என்பதனாலன்று; உழைப்பை நிறை பயனுடைய தாக்குவது என்பதனாலேயே, தன்னலத்துக்கு மட்டுமின்றிப் பொது நலத்துக்கும் உதவுவதனாலேயே அது மதிப்படைவது.

இளைஞர்கள் சிறப்பாக உடலையும், அறிவையும் ஒருங்கே பேணக் கடமைப்பட்டவர்கள். முதுமையில் அறிவு மிகுதியா யிருந்தும் அது பயன்படாததன் காரணம் உடலாற்றல் குறைவதும், அதன் பயனாக அறிவு வளர்ச்சி பெறாது நின்று விடுவதுமே யாகும். இளமையில் அறிவு எளிதில் வளர்ச்சியடைவது உடல்வலுவின் காரணமாகவே. ஆகவே, உடலுழைப்பைக்