20
அப்பாத்துரையம் - 43
தூண்டுபவர் இன்று இகழ்வே பெறக்கூடும் எனினும் நாளடைவில் உலகுக்கு பெருநன்மை செய்தவராவர் என்பதில் ஐயமில்லை.
குடியொழிப்பு வகையிலும், மற்ற தீய பழக்கங்கள் வகையிலும் மாதருலகம் பலசமயம் சீர்திருத்தத்துக்கு நீக்க முடியாத முட்டுக்கட்டையாவதுண்டு. ஏனெனில், நன்மை தீமையில் முந்திக்கொள்பவர் ஆடவரேயாதலால், அவற்றைப் பேணுவதில் பெண்கள் எப்போதுமே தலைசிறந்தவராகி விடுகின்றனர். நல்ல காரியங்களில் இவற்றின் நிறைய பயனை நாம் எங்கும் காண்கிறோம். பெண்டிர் நாகரிகமற்றது எனக் கருதும் காரியத்தை எந்த ஆடவனும் செய்யத் துணிய மாட்டான்.ஆடவர் சீற்றத்தினும் அவர்கள் நகைத்திறமும், முகக்கோட்டமும் அதனைப் பிஞ்சிலேயே கருக்கும் அனலாகின்றன. ஆயினும் தீய பண்புகளில் மக்களைச் சீர்திருத்த விரும்புபவர், இப் பெண்டிர் பண்பையும் எதிர்த்தல் தவறன்று.வேண்டுமானால், அவர்கள் மனங்குளிர ஒரு கோப்பை சிறு வெறிநீர் ஒப்புக்கு ஏற்று மிகுதியை விரும்பாதிருப்பதன் மூலம் அவர்கள் மனத்தை மாற்ற முடியும்.
"தீதெனக் கருதுகிறேன். எனினும் தங்களுக்காகச் சிறிது கொள்கிறேன்,” என்ற நயத்தக்க அன்பொழுக்கம் பெண்டிரின் முகக்கோட்டத்தையும் வெல்லுந் திறமுடையதாகும். இளைஞர் களிடையேயும், இளமங்கையர்களிடையேயும் சிறுவெறி வகைகளில் வெறுப்புப் பெருகினால், இன்றைய நாகரிக அருந்தகங்களின் பண்பும் மாறிவிடும். இன்றைய சிறு வெறி நீரகங்கள் (Cafs) யாவும் நறும்பாலகங்கள், இனிய நறு நீரகங்களாக மாறும். மேலும், இன்று புகை குடிக்கும் கை செண்டும், நறுமணச் செண்டும் ஏந்தும் கைகளாகும்.
வாணிகக்களச் சூதாட்டம் பல்லோரைக் கெடுத்து, ஒருவர் இருவர் பொருள் பெறும் ஆதாய நோக்குடையது. ஆனால், ஆதாய நோக்கம் கொண்டதாயினும், இன்பப் பொழுதுபோக்குக் கொண்டதாயினும் சூதாட்டம் எவருக்கும் உண்மையில் நன்மை செய்வதன்று. ஏனெனில், அதனால் பொருள் பெறுபவரும், பொருள் இழப்பவரும் பொருள் நோக்கம் இல்லாது பொழுது போக்காக அதில் ஈடுபடுபவரும் யாவருமே அதனால் தம் பண்பாட்டை இழப்பவராவர். நாகரிக மக்கள் என்று தம்மைப்