நல்வாழ்வுக் கட்டுரைகள்
21
பகட்டாகக் கூறிக்கொள்ளும் பலர், இத்துறையில் ஈடுபடுவதைப் பார்க்க, இக் கூற்றுப் பொருளற்றதென்று தோன்றக்கூடும். ஆனால், கூற்றை ஊன்றி நோக்கினால் இதன் உண்மை விளங்கும். இச்சூதாட்டங்கள் உழைப்பவர்களின் பொழுது போக்கு அல்ல. உழைப்பவர் அதில் ஈடுபட்டால், ஒன்று அழியவேண்டும்; அல்லது எங்ஙனமேனும் பொருள் பெற்று உழையாதவர் இனம் சாரவேண்டும். சூதாட்டப் பண்பாடு பரவுந்தோறும் உழைப்பவர் உழையாதவராகித்
வேண்டும்; உழைக்கும் இனம் ஒழிந்தும் தீர வேண்டும்.
தீர
இது மட்டுமன்று, உழையாமல் வரும் உயர்வுக்கும் பிறரைக் கெடுத்து உயரும் உயர்வுக்கும் சூதாட்டப்பழக்கம் மதிப்புத் தருகின்றது. உழைப்பவரை இழிவுபடுத்த இஃது உதவுகிறது. தவிர நாலுகாசு கொடுத்து விட்டு நாலாயிரம் பொன் பெறும் தகுதிக்கு ஏங்கி நிற்கும் அடிமைத் தனத்தையும் அலப்பையும், அதை அவாவும் கோழை மனப்பான்மையையும் இது வளர்க்கிறது. உலகின் நாகரிகத்தை வளர்க்கும் பண்புகள் இவை என்று எவரும் கூறமுடியாது. இன்றைய இன்ப நாகரிகத்துக்கு வேண்டிய பொருள்களை ஆக்கித்தரும் உழைப்பாளிகளையோ, அதற்கு வகை செய்யும் அறிஞர்களையோ, நல் இன்பப் பொழுது போக்கிற்கு உதவும் கலைஞர்களையோ கூட இச் சூதாட்டக் குழுவினரிடையே காண முடியாது என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.
சூதாட்ட மனப்பான்மை உழைப்புத் திறத்தை மட்டுமன்றி, அறிவுத் திறத்தையும் கலைத்திறத்தையும் ஒருங்கே அழிப்பது. அறிவுத் துறையிலும் கலைத் துறையிலும் கூட இன்று சூதாட்டம் புகுந்து வருகிறதென்றாலும், அவை இருக்கும் அறிவுத் திறத்தையும் கலைத்திறத்தையும் மூடாக்காகக் கொண்டு சூதாடுபவையேயன்றி, அறிவு வளர்க்கும் அறிவுத் துறைகளோ கலைவளர்க்கும் கலைத் துறைகளோ ஆகமாட்டா. உண்மையில் அவை அறிவுத் துறையாளரையும், கலைத் துறையாளரையும் ன்ப வாழ்வினரின் சூதாட்டச் சூழலில் இழுத்து, அவர்களைப் பூண்டோடறுக்க முற்படும் வழிமுறைகளேயன்றி வேறல்ல. இன்றைய நாகரிகம் சூதாட்டத்தைத் தொடர்ந்து ஆதரிக்கு மானால், வருங்கால உலகம் பழைய விலங்கு நிலையைவிடக் கீழானநிலை யெய்திக் கெடும் என்று கூறலாம்.