உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அப்பாத்துரையம் - 43

ஒருவன் பண்பாட்டுக்கு அவன் குடிமையும் பெற்றோரும் கல்வியாசிரியரும் எவ்வளவு பொறுப்புடையவராவர். ஏனெனில், குடிமையையும் பெற்றோரையும் யாரும் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. ஆசிரியரையும் ஓரளவுக்கு பெற்றோர் தேர்ந்தெடுக்கக் கூடுமேயன்றி சிறுவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆகவே, சிறுமைப்போது எவ்வளவு நெகிழ்ச்சியுடையதாயினும் இவர்கள் தாக்குதலால் குழந்தையின் மனப்போக்கு முற்றிலும் உருவாய்விடுவதில்லை. சிறுவர் அல்லது இளைஞர் தம் தோழரைப் பெரும்பாலும் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனராதலால், அவர்கள் உள்ளப் பண்புகளின் வளர்ச்சி தளர்ச்சிகளுக்கு இத் தோழர்கள் பெரிதும் காரணமாகின்றனர். அவர்களின் உள்ளார்ந்த பண்புகளே அவர்கள் அத்தோழர்களைத் தேர்ந்தெடுக்க உதவினவாதலால், இத்தோழமை அவர்கள் உள்ளார்ந்த நற்பண்புகளையும், தீப்பண்புகளையும் அப்படியே வளர்க்க உதவுகின்றன.

தோழமையின் இப்பெருஞ் சிறப்புணர்ந்த பெற்றோரும், ஆசிரியரும் அது வகையில் மிக்க கவனம் செலுத்துதல் இயல்பு. ஆனால், இளைஞரும் தம் தோழரைத் தேர்ந்தெடுப்பதில் முற்றிலுந் தன் உள்ளுணர்ச்சிக்கு ஆளாகிவிடாமல், அறிவையும் ஓரளவு பயன்படுத்த வேண்டும். கற்ற அறிவையும், பெற்றோர் ஆசிரியர் கற்பித்த அறிவையும் பயன்படுத்தி, எத்தகைய பண்புகளைய நாம் உயர்வுடையதாகக் கொள்கிறோமோ, அப்பண்புடையாளர்களின் தொடர்பையே நாம் மிகுதி அவாவுறவும், அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளவும் வேண்டும். சில சமயம் பெற்றோர் கொண்ட கோட்பாடுகளிலும், சில சமயம் ஆசிரியர் கோட்பாடுகளிலும், சமூகத்தின் கோட்பாடுகளிலும் கூட நீண்டநாள் தோய்வுற்ற தீங்குகள் காணப்படலாம். இவற்றையே சர் ஃபிரான்ஸிஸ் பேக்கன் 'குடும்பத்தப் பெண்ணங்கள்' (Idols of the cave) தப்பெண்ணங்கள்' (idols of the market place) 'மனித வகுப்பின் தப்பெண்ணங்கள்' (Idos of the race) என்று வகுத்தனர். எனவே, ஓரளவு பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் வழியைப் பின்பற்றியபின் தத்தம் பகுத்தறிவையும் முழுதும் பின்பற்றி ஆராய்தல் வேண்டும்.

'ஊர்த்