88
அப்பாத்துரையம் - 43
தொடங்கிச் சமூக வாழ்வில் முடிவதாகும். ஒருவரது இன்றைய வாழ்விற்குக் காரணமான முன்னோர் அவன் தந்தையும் தந்தையின் தந்தையும் ஆகிய நேர் முன்னோர் மட்டுமல்லர். ஒவ்வொருவர் நேர்வழி முன்னோர்கள் என்பது கூடத் தவறு. தந்தையின் தாய் தந்தையும், தாயின் தாய் தந்தையும் என இம் மரபு பெருகி, கிட்டத்தட்ட ஒருவர் இன முழுவதையும் குறிப்பதாகும். ஆனால், மனித நாகரிகம் ஓர் இன எல்லையுட் பட்டது அன்று. ஆகவே, ஒருவர் பிறப்பில் அடையும் நாகரிகப் பண்பு அவருக்கு முந்திய எல்லாத் தலைமுறைகளிலும் உள்ள உயர்வு அவனும் அவன் குடியும் பிறருடனும் பிற குடிகளுடன் உறவாடும் அளவைப் பொறுத்திருக்கிறது. ஒரு நாட்டின் நாகரிக உயர்வும். அந்நாடு உலக நாடுகளுடன் உறவாடி அவற்றின் நற்பண்புகளை மேற்கொள்ளுவதையே பொறுத்திருக்கிறது. இங்ஙனமாதலால், தனிமனிதன் தன்னைப் பேணுவது, தன் மரபைப் பேணுவது என்பது கூடியமட்டும் தன் முன்னோராக்கிய சமூகத்தின் எல்லா அறிஞர் அறிவின் பயனாகியப் பண்புகளைப் பேணுவதும், வளர்ப்பதுவும், வளர்க்கவும் மக்களைப் பயிற்றுவதுமேயாகும்.
இன்றைய பெற்றோர் தம் முழுப்பொறுப்பையும் நிறைவேற்றா திருப்பதற்குரிய பொறுப்பில் பெரும்பகுதி அப்பெற்றோருக்கு மட்டும் உரியதல்ல, இன்றைய சமூக முழுவதற்குமேயுரிது என்பதும் இதனால் தெளிவாகும். ஆனால் தனி மனிதர், “செய்த்தக்கன செய்யாமையாலோ செயத்தகாதன செய்வதாலோ,” தான் சமூகசீர்கேடு உறுகிறதாதலால், தனி மனிதர் முதற்கடமையும் பெற்றோர் முதற் கடமையும் தம்மளவில் சமூகநோக்கும் குறிக்கோளும் உடையவராய், தம்மைத் திருந்திய மரபு தோற்றுவிப்பதேயாகும்.
தாம் உழைப்பதனால், அவர்கள் தம் உடல் பேணி மக்களையும் தூண்டி உழைத்துண்டு உடல் பேணும் பண்பை வளர்க்க வேண்டும். தானுழைக்காது உண்பவரும், பிறர் உழைக்க உண்பவரும் கெட்டவர் மட்டுமன்று, அறிவிலிகளும், கீழ் மக்களுமாவர் என்ற கருத்தைச் சொல்லாலும், செயலாலும் பரப்பவேண்டும். இக்கருத்தின் தோய்வே ஒருவனை உயர்குடியின னாகவும், தாழ்குடியினனனாகவும் பிரிப்பது.