நல்வாழ்வுக் கட்டுரைகள்
89
தவிர, தம் நலனே பேணுவதிலும் பிறர் நலமே பேணுவது உயர் பண்பு மட்டுமன்று அறிவுடைமையுமாகும். நாம் பிறரைப் பேணுவதால், நம் நலனில் பலருக்கு அக்கரை பிறக்கிறது. அவரும் பிறர் நலமே பேணுவதால் தன்னலம் பொதுநலம் ஆகிய வேறுபாடற்ற, சமூக நலம் ஒன்றே வளர்கிறது. இப்பண்பே நாகரிகம். பெற்றோர் இப்பண்பில் தம் பிள்ளைகளைத் தொடக்கத்திலிருந்தே பயிற்றுவித்தல் வேண்டும்.
பிள்ளைகளின் தீய பண்புகளை பண்புகளை அகற்றுவதிலும், நற்பண்புகளை அகற்றுவதிலும், நற் பண்புகளைப் பேணுவதிலும் பெற்றோர் பின்பற்ற வேண்டிய இயற்கைத் தத்துவங்கள் பல. இவை வெளிப்பார்வைக்கு ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முரண்பாடுகளாகத் தோற்றத்தக்கவை. கட்டுப்பாடு வேண்டும், ஆனால் தற்போக்கும் பண்பை வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்; அதே சமயம் தற்சார்பு வளர்த்தல் வேண்டும். மரபுப் பண்பை ஊட்டவேண்டும்; ஆயினும் தற்பண்பை ஊக்கவேண்டும். கண்டிப்பும் ஒறுப்பும் வேண்டும். ஆனால் அன்பும் ஊக்கமும் தேவை. பொது அறிவு ஊட்ட வேண்டும்; ஆனால் பகுத்தறிவுணர்வு கொள்ளவும், புத்தறிவாற்றல் வளரவும் வழி செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால் அரசரிடம் அமைச்சர் ஒழுகுவதுபோல் பெற்றோர் பிள்ளைகளிடம்
அகலாது
அணுகாது தீக்காய்வார்போல,” இருக்கும் நடுநிலைப் பண்பைத் தேறவேண்டும். எந்த அளவில் எந்தப் பண்பு எந்தச் சூழ்நிலையில் எந்தப் பருவத்தில் வேண்டும் என அறிவதே பெற்றோர்க்கு இயல்பாய் அமையவேண்டும் பண்பு. பெற்றோர் காதல் வாழ்வில் வாழ்ந்தவரானால், இப் பண்பு அவர்களிடம் இயற்கையில் உண்டாகும். காதல் வாழ்விற்குப் பதிலாக மக்கட் காதலிலும் சமூகக் காதலும் அவர்கள் ஈடுபட்டாலும் இ பண்பு தோன்றாமற் போகாது.
பெற்றோரைப் போல பிள்ளை என்பதிலும் தாயைப்போலப் பிள்ளை என்பதே ஆண்மகவு, பெண்மகவு ஆகிய ருபாலாரிடத்திலும் உண்மையாதலால், தாய் தன்னையும், தன் பண்புகளையும் பேணுவதில் தவறிவிடக்கூடாது. நம் நாட்டில் சிறப்பாகவும், பிற நாடுகளில் பொதுவாகவும் தாய்மார் பலர் பெண்மையைக் கீழ்ப்பாலதாக எண்ணி நடப்பதுண்டு.ஆண்களே