நல்வாழ்வுக் கட்டுரைகள்
95
பிள்ளைகளாக வளர்ப்பவரும், தத்தம் போலி இன்பத்திற்காகப் பிள்ளைகள் வாழ்வைப் பலி கொடுக்கும் எமன்களே யாவர். பிள்ளைகளை எவ்வளவு கொஞ்சும் போதும் அவர்கள் பொம்மையல்ல, ஆட்டுக்குட்டிகளும் கன்றுக்குட்டிகளும் அல்ல. வளர வேண்டிய மனிதர் என்பதையும்; அவர்கள் இன்று தம்மை யொத்த பிள்ளைகளையும், இயற்கைப் பொருள்களையும் தாமே அறிந்து பழகும் அளவிலேயே, நாளை அவர்கள் தம்மையொத்த மனிதரை அறிந்து பழகி உலகப் பொருள்களைக் கையாள வல்லவராவர் என்பதையும் தாய் தந்தையர் என்றும் மறத்தலாகாது. கூடுமானபோதெல்லாம் உயிர்களிடம் பொதுவான அன்பு, உயிர்களின் இன்பத்துன்பம் பற்றிய எண்ணம், நலம் கேடு தரும் உயிரினம் பற்றிய அறிவு முதலியவை குழந்தைகளுக்கு அளிக்கப்படவேண்டும்.
அன்றியும் தம்மைப்போன்ற பிள்ளைகளையும், தம் தாய் தந்தையர்களின் உற்றார் உறவினர் நண்பர்களையும், பிள்ளைகள் தக்கவாறுணர்ந்து அன்பு பாராட்டிப் பழகவும், நண்பரென அறியாதவிடத்து அகல இருந்து நோக்கவும் அவர்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். சில குழந்தைகள் யார் வந்தாலும் பண்டமும் பொருளும் கேட்கவும், வேறு சில குழந்தைகள் யாரிடமும் எதுவும் பெற மறுக்கவும் பழக்கப்படுகின்றன. இரண்டும் தவறு; பொதுவான பாசத்துக்கிடையே தாய் தந்தையரை ஒத்தவர் இவர் இவர், தாய் தந்தையரைப் போன்றவர் இவர் இவர் என்ற பகுத்தறியும் பண்பைப் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். 'இவன் நற்குடியினன்' என்று உலகோர் நாளைப் பிள்ளையை மட்டும் கண்டு, தாய் தந்தையரும் பண்பறிந்து கூறுவது இத்தகைய திறங்களாலேயே ஆகும்.
பிள்ளைகள் செய்யும் குறும்புகளைத் தகா முறையில் அடக்கமுனைந்து அவர்களைக் கெடுப்பவரும், அடக்க முடியாமல் அல்லற்படுபவரும் பலர். குறும்புகள் செய்யும் பிள்ளைகளே பெரும்பாலும் பிற்கால வாழ்வில் அறிவும், திறமும் மிக்கவராயிருக்கின்றனர் என்பதை அனுபவமுடையோர் அறிவர். இக்குறும்புகள் பிள்ளைகளின் அறிவின் முதல் தாக்குதலேயாகும். ஆதலால், அதனை முற்றிலும் அடக்காமல் ஓரளவு சிறு குறும்புகளைக் கண்டிக்காது விட்டும், தீங்கற்றவற்றில் ஊக்கியும்,