உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அப்பாத்துரையம் - 43

மற்ற விடங்களில் அக்குறும்புகளின் பயன்களை அன்புடன் விலக்கியும் இன்றியமையா இடத்தில் மட்டும் திடுமென அன்பை விலக்கி ஒறுத்துத் திருந்தியவுடன் முன்னிலும் மிகுதி அன்பு காட்டுதலும் வேண்டும். பிள்ளைகளிடம் மட்டுமன்றி, யாவரிடமும் தண்டனையின் பண்பு இதுவே எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். “கடிதோச்சி மெல்ல எறிக," என்பதே அம்முறை. தண்டனையின் ஆற்றல் அளவு ஒறுப்பின் அளவன்று; ஒறுப்பின் பேணா ஏற்படும் தற்காலிக அன்பு விலக்கின் அளவே, என்பதைத் தண்டனை தரும் பொறுப்புடையோர் கவனித்தல் நலம்.

னனில்

"தீமையிது, இது செய்யற்க,” என்று அடிக்கடி கூறுவதைவிட, “நன்மை இது, இது செய்க” என்று கூறுவதே உளப்பண்பறிந்த ஒழுக்க முறையாளர் மரபு. ஏ 'செய்யற்க' என்ற சொல்லின் வலிவினும் மிகுதியாகத் தீமையின் தடம் அதை அடிக்கடிக் கூறுவதால் மனத்திற் பதியும். தவிர மனிதப் பண்பு பொதுவாகவும், குழந்தைகள் பண்பு சிறப்பாகவும் செய்யாதே என்பதன் வகையில் செயலார்வம் கொள்வதேயாகும். அத்துடன், 'செய்க செய்யாதே' என்ற அறிவுரையை விட, 'இங்ஙனம் செய்தனர் இத்தகையர்; இங்ஙனம் செய்தனர் இத்திறத்தார்,' என வேறு பிரித்துக் காட்டல் சிறப்புடையது. இங்கும் நீதியைப் புகுத்திக் காட்டும் கதைகளை நீதியைப் பற்றிக் குழந்தைகள் தாமே சிந்தித்துத் தாமே தமக்குரிய நீதிக் கருத்துக்களை உருவாக்கத் தூண்டும் கதைகளும் சிறப்புடையவை. வீரம், வாய்மை, தியாகம் முதலிய பண்புகள் வெற்றியடைகின்றன என்று காட்டும் கதைகளைவிட, அவற்றைப் படம் பிடித்துக் காட்டும் கதைகளே உள்ளத்தைப் பண்படுத்தக்கூடியவை. ஏனெனில், கீழ்த்தரமான வாழ்க்கை வெற்றிகளால் இவற்றின் உயர் உணர்ச்சிப் பண்புகளை அளக்க முடியாது. அவை உணர்ச்சியை நேரிடையாக எழுப்பவல்லன. ஆதாய நோக்குக்கு அப்பாற்பட்ட அழகுணர்ச்சி, காதல் முதலியவைபோல வையும் இயற்கைப் பண்பாட்டை ஊட்டுபவை.

பிள்ளை வளர்ப்பில் பழகியவர்கள் இவற்றினும் உயரிய ஒரு முறையறிந்து கூறுகின்றனர்.நல்ல பண்புகளைப் புறப்பண்பாகக் கூறாமல், பிள்ளையின் பண்பாகவும், பிள்ளையின் பெற்றோர், முன்னோர் பண்பாகவும் குறிப்பிட்டு அவர்கள் மரபுணர்ச்சியை