நல்வாழ்வுக் கட்டுரைகள்
97
ஊக்குவது, அவர்கள் பண்பை உயர்த்துவதில் ஓர் ஒப்பற்ற கருவியாகும். இத்தகைய மரபுப் பற்று குறுகிய பற்றன்று. கீழானவர் கைப்பட்டாலல்லாமல், அது குறுகிய பற்று ஆகவும் ஆகாது. "என் குடி உயர்வுடையது; என் நாடு' என் மொழி உயர்வுடையன; என் இனத்தின் மரபு இது,” என்று கருதுபவன் உணர்ச்சியில் என் என்ற சொல்லின் பொருள், “நான் பெற்ற மரபு அது; நான் அதனை வளர்ப்பேன்; அதற்காகவே வாழ்வேன்; அதற்கு மாறுபாடாக கண்ணிலும் எதுவும் பட்டாலும் அதை நான் இல்லாமற் செய்வேன்," என்பதாகும். எனவே ஒருவன் ‘பாண்டியன் பணியமாட்டான்' தமிழன் வீரமரபில் வந்தவன், “தென்னவன் பின்னிடான்,” என்று கூறும்போது, அவன் சேரன் பணிபவன் என்றோ கூறுவதாகமாட்டாது. சில சமயம் வலியுறுத்துவதற்காக மாறுபட்ட குழுவினரைப் பழித்துக் கூறப்பட்ட விடத்திலும் பண்புடையார் அதனைப் படர்க்கைக் கூற்றாகக் கொள்வாரேயன்றித் தன்மைக் கூற்றாகக் கொள்ள மாட்டார். ஆரியன் ஒருவன், சோழன் ஒருவன், இத்தகைய உரைகளைக் கேட்காமல், இது பாண்டியர் கூற்று, தமிழர் கூற்று எனக் கருத்தில் பெயர்த்துக் கொள்வான். இத்தகைய மரபுணர்வு பேணுவதனால், மரபுகளிடையே போட்டி உணர்ச்சி ஏற்படுவது உறுதி. ஆனால், மரப்பண்பாயிருக்குமிடத்தில் இப்போட்டியும் அன்புப் போட்டியாகவும் வரவர விரிந்து செல்லும் அன்புணர்ச்சியாகவும் வளர்வது உறுதி.
குடும்பம் இதற்கு உண்மையில் ஓர் ஒப்பற்ற வழிகாட்டியாகும். என் தங்கை, அவன் தங்கை என்று போட்டியிடும் சிறுவன் வாழ்வில் பிற்காலத்தில், அவன் தங்கையாகவே இருப்பினும் அவள் பிறர் மனைவியாய், பிறர் தங்கை அவன் தங்கையினும் உரிமையுடைய காதல் மனைவியாகிறாள். அவ்வன் புரிமையும் தாண்டிப்புதுவராகிய பிள்ளையிடமும், பிள்ளை தாண்டி அதன் காதலுக்குரிய மற்றக் குடும்பங்களிடமும் அது பரவுகிறது. எனவே, குடும்பப் பண்புடன் மரபுப் பண்பும் பேணுபவன். உலகப் பண்பிற் குறைந்த எதனினும் நிறைவு பெறமாட்டான். அவனுக்குக் குடும்பம், இனம், வகுப்பு, ஊர், நாடு யாவும் உலகத்துக்குரிய படிகளாகவே இருக்க முடியும். குழந்தையின் பண்பை இந்த இலக்கு நோக்கிச் செலுத்துபவர், அவனைத் தம் குடியிலும் வகுப்பிலும் இனத்திலும் நாட்டிலும் உயர்வு பெறச் செய்து