98
அப்பாத்துரையம் - 43
அவ்வக் குழுவினுக்கும் உயர்வு அடையும் உயர்வு, அவர்கள் எவ்வளவு விரிந்த குழுவின் இலக்கை எட்டுகின்றனர் என்பதைப் பொறுத்ததே. ஆயினும், விரிவு நாடி அவர்கள் முன்படிகளைக் கடந்து செல்லின், அவர்கள் புகழுக்குரியவராக மாட்டார். உரியவராயினும் அஃது அடிமைகள் கூலிகள் பெறும் போலிப் புகழேயாகும். ஏனெனில் தாயைப் பட்டினியிட்டுத் தானம் வழங்குபவன் செயலாகவே அவன் செயல் இருக்கமுடியும்.
மேலும், நாடு, இனம், மொழி ஆகியவற்றின் மூலமாகவன்றி, எவரும் உலக நாகரிகத்தில் பங்கு கொள்ளவும் முடியாது; வளர்ச்சி பெறவும் முடியாது; பிற நாகரிகங்கள் ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய தூண்டுதல் தரக்கூடும். சிலசமயம் தாய்நாட்டில் உயிர்ப்பிழந்து சோர்வுற்ற, அல்லது இறந்துபட்ட நாகரிகத்தின் பண்புகள் புத்தம்புதிய இனத்துக்குத் தூண்டுதல் தந்து, வளர்ச்சியை விரிவுபடுத்தலாம். ஆனால், எங்கும் எப்போதும் தற்பண்பாகிய விதையிலிருந்துதான் நாகரிகம் வளர்ச்சியடையும். பிற நாகரிகங்கள் அதற்கு உரமாகலாமேன்றி விதையாகமாட்டா. உரமாவதும் முரண்பட்ட பண்புகள் இராமல், அடிப்படைப் பொது உறவும், மேற்படையான நிறைவுப் பண்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே யாகும். உரமிக்க தற்பண்புடைய, அஃதாவது நல் உயர்ப் பண்புடைய தமிழ் போன்ற மொழியினங்கள் பிற இனங்களின் பண்புக் கலப்பால் பெரும்பாலும் கெட்டிருக்கிறதேயொழியத் திருந்தியதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கூடத் தமிழகத்திற்கு அரசியல் தூண்டுதல் தந்ததேயன்றி, நாகரிக மேம்பாட்டுக்கு உதவவில்லை. அது தமிழரைத் தற்பண்பு நோக்கி மீள்வதற்கான ஊக்கம் அளிக்க மட்டுமே செய்துள்ளது.
பிள்ளைகள் எல்லாப் பிள்ளைகளுடனும் சரிசமப் பண்பு பேணும்படி பழக்கப்பட வேண்டும். அது மதிப்பிற்குரிய ஒரு செய்தி மட்டுமே என்று பலர் கருதுகின்றனர். அது தவறு; நீகிரோவரை அடக்கிப் பழகிய மேல் நாட்டுக் குடியேற்ற வெள்ளையர், தம் நாட்டுக்குத் திரும்பியபின், மற்ற ஆங்கிலேயரைவிட எளிதாக ஏழை மக்களைக் கொடுமையாக நடத்தும் பண்பை மேற்கொண்டவர். மக்கள் சமத்துவம் பற்றிய புரட்சிக் கருத்துக்களை உலகிற்கு முதல் முதலில் அளித்த அறிஞர் பிரிட்டானி யராயிருந்தும், புரட்சியியக்கத்திற்குப் பிரிட்டன்