உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

109

முதியோர் இளைஞருடன் போட்டியிடுதல் முறையுமன்று, நலமுமன்று. இளைஞர் வயது வந்ததும் தம் பாதுகாப்புக்குரிய வற்றைப் பேணுமாறு அவர்களைத் தனியே விட்டுவிட வேண்டும்.

மொத்தத்தில் தாய் தந்தையர் குடும்ப வாழ்வை மனித நாகரிகத்தின் தலைக்கோயிலாக்கி வாழ்ந்தால் மனிதர் வாழ்விற்குரிய தெய்வத்தை அக்குடும்ப எல்லைக்கு வெளியே தேடவேண்டிய அவசியமேயிராது. திருவள்ளுவர் பெருமான் இதனை உட்கொண்டேபோதிலும்,

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

என்று கூறினார்.

(குறள் 50)