உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அப்பாத்துரையம் - 43

உறவினர் ஆகியவர்களே பொறுப்புடையவர்களாகக் கருதப்படு கிறார்கள். மணப்பொறுப்பு, மொழியுரிமை, வழக்கு மன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறும் உரிமை ஆகிய எதுவும் இப்பருவம் கடந்து முழு மலர்ச்சிப் பருவம் எய்தினும் மேல் வளர்ச்சி பெறாது போவதும் உண்டு. சமூகப் பண்பு முற்றுப் பெறாத இவர்களும், சமூகப் பண்புடன் நின்றுவிடும் இவர்களும் அரும்பில் வதங்கிய மலர்களையும் பிஞ்சில் வெம்பிய காயையும் போல்பவர்கள். சமூக வாழ்வாகிய செடி வாழ்க்கையில் அவர்கள் உண்மையில் ஓர் உறுப்பாவதேயில்லை. இத்தகையோர் பிறந்தும் பிறவாதாரிலும் வாழ்ந்தும் வாழாதாரிலும், வாழ்விலேயே இறந்தவரிலும், வைத்தெண்ணத் தக்கவர்கள். எனவேதான் அறநூலார்,

“தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்,

தோன்றலில் தோன்றாமை நன்று’

99

(குறள்.236)

என வகுத்தனர். சமூகப் பண்பு வளர உதவும் வாழ்வே வாழ்வு, மற்றவை வாழ்வல்ல என்பதே இதன் குறிப்பு.

முழு மலர்ச்சிப் பருவம்வரை மனிதன் செயலாற்றுவதற்கு உதவும் அறிவு, ஐம்பொறியறிவாகிய ஐயறிவே. அவற்றால் அவன் அறியும் அறிவும், சமூகம் முன்பே அறிந்த அறிவுப் பகுதியாகிய பொது அறிவு மட்டுமே. பழைய அறிவாகிய இப் பொது அறிவிலிருந்து, புதிய அறிவாகிய மெய்யுணர்வு பிறக்க, பகுத்தறிவாகிய ஆறாம் அறிவு செயற்பட வேண்டும். அறிவின் முழு மலர்ச்சிப் பருவத்தை எட்டாதவரும், அதனை எட்டி மேற்செல்லாதவரும் இங்ஙனம் விலங்குகளுக்கும், மனிதருக்கும் பொதுவாக உரிய ஐயறிவு மட்டுமே உடையவராவர். தமிழ் ஆன்றோர், ஐயறிவுடைய இத்தகையோரை விலங்குகளுடன் ஒன்றுபடுத்தி “மாவும் மாக்களும் ஐயறி வினவே,” “மக்கள் தாமே ஆறறி வுயிரே," என்று வகுத்தனர். தமிழக நீங்கிய பிற புலத்தார் மனிதவுருவுடைய மாக்களையும் மக்களாகக் கணித்தனராதலால், ஆறறிவுடையோரைச் சிறப்பிக்க அவர்களைப் புத்தேளிர் என்றனர். இத்தகைய மக்கள் நிலை, அல்லது புத்தேளிர் நிலை பெற்றோரே புகழ்பெற்றோர் ஆவர்.

தனிமனிதன் வாழ்வுக்குத் தாயகம் சமூகப் பண்பு. இஃது உயிர்ப் பண்பின் ஒரு பகுதியே. இவ்விரண்டும் கடந்த முடிவான