உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

113

தாய்ப் பண்பு இயற்கைப் பண்பு. இயற்கைப் பண்பும், சமூகப் பண்பும் தனிமனிதன் வாழ்விற்குரிய தாய் தந்தைப் பண்புகள். மீன் நீரில் பிறந்து நீரில் வளர்ந்து நீரில் கரைந்த காற்றையே உயிர்ப்பதுபோல, மனிதனும் இயற்கைப் பண்பின் வழிவந்த சமூகப் பண்பில் பிறந்து, சமூகப் பண்பில் வளர்ந்து சமூகப் பண்பில் தோய்ந்தூறிய இயற்கைப் பண்பே உயிர்த்து வளர்கிறான். மீன் நீரையும் நீரியக்கங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆனால், அவற்றின் ஆற்றல் மீனின் இயக்கத்தை தடைப்படுத்தவும் இறுதியில் அழிக்கவும் முடியும் தாய் தந்தையர் யுதவும் பண்புகள் பிறப்புக்கும் வாழ்வுக்கும் மட்டுமன்றி, மாள்வுக்கும் காரணமாகக் கூடும் என்பதை ஓர் அழகிய உவமை வாயிலாக விவேகசிந்தா மணியின் ஒரு பாட்டு விளக்குகிறது,

“சங்குவெண் தாம ரைக்குத்

தந்தைதாய் இரவி, தண்ணீர்!

அங்கதைக் கொய்து போட்டால்

அழுகச்செய் தந்நீர் கொல்லும்

துங்கவெண் கரையில் போட்டால் சுடரவன் காய்ந்து கொல்வான்!”

என்பதே அப் பாட்டு.

இங்ஙனம் ஆக்கமுறையில் மட்டுமன்றி, எதிர்பாற்றல் வகையிலும், அழிவாற்றல் வகையிலும் தாய்ப் பண்புகளாக விளங்கும் இயற்கைப் பண்பு. அதன் வழிவந்த உயிர்ப் பண்பு, சமூகப் பண்பு, இவற்றின் வழிவந்த பிற நாகரிகப் பண்புகள் ஆகிய யாவற்றைவும் தமிழ் ஆன்றோர் ஒருங்கே ஊழ் என்றனர் இவற்றுள் இயற்கைப் பண்பாகிய மூலஊழ் எல்லாவற்றிலும் வலுவுடையது. மீனின் இயக்கத்துக்குக் கடலின் இயக்கம் போலவும்,பறவையின் இயக்கத்துக்குப் புயலின் இயக்கம் போலவும், இது வரம்பற்ற ஆற்றலாகவும், அதே சமயம் உயிர்ப்பண்பற்ற, விருப்பு வெறுப்பற்ற, தன்னளவில் வளர்ச்சியற்ற அஃறிணை ஆற்றலாகவும் அமைந்துள்ளது. தமிழர் இதனையே தெய்வம் என்ற அஃறிணைச் சொல்லால் குறித்தனர். உயிர்களில் செயலாற்றும்போது இது மரபாகிறது. சமூகத்தில் செலாற்றும்