(114 ||.
அப்பாத்துரையம் - 43
போது இது சமூக மரபுகளாகவும்; அறிஞரால் வழங்கப்பட்டுச் சமூகப் பழக்கமானபின் பழக்க வழக்கங்களாகவும் மாறுகிறது. குடும்பம், சமூகம் ஆகிய எல்லை கடந்து நாட்டெல்லை அல்லது ஆட்சியெல்லையில் இப் பழக்க வழக்கங்களின் அடிப்படையாகச் சட்டங்களும், அரசியலமைப்பு முறைகளும் ஏற்படுகின்றன.
நாட்டெல்லையுடன் அமையாமல், அதனைக் கடந்து உலக எல்லையையும் அறிஞர் மனத்துள் வகுத்து, அதற்குப் பொதுவான கட்டுப்பாடுகளையே ஒழுக்கம் என்ற பெயரால் குறித்தனர்.ஆனால், குடும்ப எல்லையிலுள்ள கட்டுப்பாடுகளைப் பேணி வலியுறுத்தக் குடும்பத் தலைவராகிய தந்தையும் தாயும், சமூகக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தவும் நாட்டுக் கட்டுப்பாடு களை வலியுறுத்தவும் அரசன் அல்லது ஆட்சியாளரும் இருப்பதுபோல், உலகக் கட்டுப்பாடுகளாகிய ஒழுக்கத்தை வலியுறுத்த ஒரு தலைவன் கிடையாது. அரசன் ஆணைநின்று அதனைச் செயற்படுத்தும் பணியாட்களும் ஒழுக்க வகையில் கிடையாது. இப் பொறுப்பைத் தனிமனிதன் வகிக்க வேண்டுமாத லால், அவன் உள்ளக் கற்பனையில் உலகத் தலைவனாக ஒரு கடவுளையும், ஒவ்வொருவர் தனி வாழ்விலும் அவன் ஆணைய வலியுறுத்தும் பணியாளர்களாக மனச் சான்றினையும் உருவகப்படுத்திக் காட்டினர். சமயங்கள் அறிஞரது இவ் வுருவகக் கருத்தைப் பயன்படுத்தி, அவற்றின் அடிப்படையில் புதுக்கட்டடம் அமைத்தன.
தெய்வம் என்ற சொல்லையும் ஊழ் என்ற சொல்லையும் கடவுள் அல்லது இறைவன் என்ற சொல்லையும் பலர் ஒரு பொருள்பட வழங்குவதுண்டு. இது முற்றிலும் சரியன்று; தெய்வம் என்பது தன் செயலற்ற, ஆனால் எல்லாச் செயலையும் கட்டுப்படுத்தும் அஃறிணைப் பண்பாகிய இயற்கைப் பண்பு. ஊழ் என்பது அதனை அடிப்படையாகக் கொண்டு தனி உயிர் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் அதன் வளர்ச்சிக்கு விட்டுக் கொடுத்து உதவும் வினைப்பண்பு. இஃது அஃறிணைப் பண்பல்லவாயினும் செயற்பண்பாயிராமல், தனி உயிர் முயற்சியால் செயற்படும் செயப்படு பண்பாய், அமைந்துள்ளது. கடவுள் என்ற சொல் எல்லாத் தனிமனிதர், தனி உயிர்களும் வளரும் வளர்ச்சியின் இலக்காகவும், அறிஞர் காட்டிய வழிகளின்