நல்வாழ்வுக் கட்டுரைகள்
115
இலக்கான கடந்த குறிக்கோளாகவும் கருத்துருப் பெற்றபண்பு. இஃது அஃறிணைப் பண்புமன்று, செயப்படு பண்புமன்று. செயலிலக்கான பண்பு.
தனிமனிதன் வாழ்வின் சூழலாகிய இயற்கைப் பண்பு, உயிர்ப்பண்பு, சமூகப்பண்பு ஆகிய ஊழ்த்திறங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் துணையாலேயே மனிதன் செயலாற்றுகிறான். அவற்றை அவன் கழித்துவிட முடியாது.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்”
(குறள் 380)
என ஆன்றோர் கூறியது தனாலேயே. ஆயினும் ஒழிக்க முடியாதவை என்பதனால், அவை வெல்ல முடியாதவையோ, ஆட்கொள்ள முடியாதவையோ ஆய்விட மாட்டா. நீரோட்டத்தை எதிர்த்து நீந்துபவன் முயற்சி ஓட்டத்தின் ஆற்றலால் தடைப்படுவது உறுதி. ஆனால் அம் முயற்சி சிறு அளவாயினும், அந்த அளவில் நீரோட்ட வேகத்தைக் குறைக்கவாவது செய்யாமற் போகாது.
"தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”
(குறள் 616)
என்ற மூதுரையின் குறிப்பு இது. இங்குத் தெய்வம் என்றது இயற்கைச் சூழ்நிலைப் பண்பாகிய கண்ணற்ற ஊழையே. எதிர்த்துச் செயலாற்றும் முயற்சி அல்லது ஆள்வினை அளவிலும் பண்பிலும் அறிவிலும் மிக்கதானால், ஊழின் ஒழுங்கைச் சரிசெய்வது மின்றி, அதனைப் பேரளவில் வெல்லவும் முடியும். இங்ஙனம் செய்பவரே செயற்கரிய செய்பவர் ஆவர்.
இயற்கைப் பண்பு பிற பண்புகளுக்கெல்லாம் அடிப்படை யாய் நிலையாய் இருப்பது போல, ஊழை வெல்லும் கருவியாகப் புத்தூழ் படைக்கும் பெரியாரும் உண்டு. இப்புத்தூழ் அவர்கள் ஊழை அல்லது இயற்கையின் பொதுநிலையை எதிர்த்து வென்ற வெற்றியை நிலையான நாகரிகப் பண்பாக்குகிறது. மனித நாகரிகத்தில் மொழிவகுத்தவர், மொழிக்கு எழுத்து வடிவு வகுத்தவர். தீயின் பயனை அறிந்து முதலில் வழங்கியவர்,