அப்பாத்துரையம் - 43
116 ||. உலோகங்களை முதலில் வழங்கியவர் ஆகிய நிலையான கருவி யூழ்களை வகுத்த பெரியார்களே
முனைவர் என்று போற்றப்படுகின்றனர். இவர்களையே வள்ளுவர் பெருமான் 'ஊழையும் உப்பக்கம் கண்டவர்,' 'செயற்கரிய செய்தவர்,' 'தெய்வத்தொடு வைத்தெண்ணப்படத் தக்கவர்' என்று சிறப்பித்துள்ளார். இவ்வகையில் முதல்வரே 'பகவன்' ஆவர். தெய்வத்தின் ஆற்றலும் கடவுட் குறிக்கோளும் நிலையான உலகப் பற்றும் மிக்கவராய் உலகுக்கு என்றென்றும் பயன்படும் நிறைபயனுடைய அடிப்படைக் கருவிகளை அமைத்தவர் இவர் என்றுங் கூறலாம்.
கீழ்நாட்டு வாழ்வில், சமூகத்திலும் சமயத்திலும் அரசியலிலும் மக்கள் அக்கரை கொள்ளாமல் ஆதிக்க வாதிகள் கையிலேயே அவற்றை முற்றிலும் விட்டதனால், இம் முத்திறக் கட்டுப்பாடுகளுமே மக்கட் சார்பற்றவையாய்விட்டன.சமூகத்தின் தலைவராயமைந்தவர் தந்நல வேட்டைக்கேற்பச் சமூகக் கட்டுபாடுகளும், சட்டங்களும் அமைந்தன. பழக்க வழக்கங்களை அறிஞரும் மக்கட் பற்றாளரும் தலைநின்று பேணி வகுத்து, வேண்டும் உருவில் மாற்றியமைப்பதற்கு மாறாக, அவை ஆதிக்கவாதிகளுக்கு வேண்டிய அளவில் மட்டும் திரிக்கப்பட்டு, மக்கள் உணர்ச்சிக்கு விட்டுக்கொடுக்காத தொய்வற்ற, வளர்ச்சியற்ற, நிலைவரமான மரச்சட்டங்களும் கற்சட்டங்களும் ஆயின. தனிமனிதன் ஒழுக்க முறைகளும் ஆதிக்கத் தலைவர்களை எதிர்க்குமிடத்தில் ஒடுக்கப்படுகின்றனவாதலால், அவையும் ஒருதலைச் சார்பாக, எதிர்மறைப் பண்பாக நடைபெறுகின்றன. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்' என்ற அறமொழிக்கு இந்நாளைய ஒழுக்கமுறை சென்றுள்ளது.
"அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என்று கவிஞர் பாரதியார் முறையிட்டுள்ளது, இது பற்றியே யாகும்.
உலக நாகரிகத்தில் மேனாடுகள் பலபடி பிற்பட்டு நின்றவையே. ஆனால், தனிமனிதன் ஒழுக்கமுறை அங்கே இத்தகைய சீர்கேடுகளால் எதிர்மறைப் பண்பாகாமல்