உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

அப்பாத்துரையம் - 43

துன்ப விடுதலை பெற, துன்பத்தின் தலைகளை இறுக்கும் வறுமையை ஒழிக்க, நோவு, நோக்காடு, துயரங் களைஅகற்ற, நிலையான இன்பத்தை அடைந்து, தீமை துன்பம் ஆகியவற்றுக்குத் தடையுத்தரவு இட்டு நிறுத்த வழி இல்லாம லில்லை; உண்டு நீடித்த அமைதி நிலவச் செய்ய வகை உண்டு. அதுவே தீமையின் இயல்பு, காரணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு கைவரப்பெறுதல் ஆகும்.

தீமையை மறுப்பது, மறைப்பது போதாது. அதன் இயல்பை உணர்ந்து காரணத்தைக் கண்டுணரல் வேண்டும். தீமையை நீக்கக் கடவுளை வணங்கித் தொழுவதனால் பயன் ஏற்படாது. தீமை ஏன், எப்படித் தோன்றுகிறது என்பதை அறிந்து, அதன் படிப்பினைகள் மூலம் அத்தீமையையே நன்மையாக்கி இயக்க முயல வேண்டும். இத்தகைய அறிவு இல்லாத வெற்றாற்றல் எதுவும் செய்ய இயலாது. படபடப்புடன், ஆத்திரத்துடன் தீமையின் தளைகளை அழிக்கப் பாடுபடுவன் விலங்கைக் கையாலும் பல்லாலும் உடைக்க முயல்பவன் போல அல்லற் படுவான். அம் முயற்சிகளால் தளை இறுகும்; மனது புண்படும், தீமை பெருகவே செய்யும்.

ஆத்திரம் அனுபவமின்மையின் சின்னம். அடக்கமும் பொறுமையும் அனுபவத்தின் முதிர் பயன்கள். அடம் அறியாமையின் சின்னம். பணிவே அறிவின் கதிர்விளைவு. அடக்கம், பொறுமை, பணிவு ஆகிய மூன்றையும் அவாக்கள் தூண்ட, அறிவின் கூடிய ஆர்வமும் முயற்சியும் பிறக்கின்றன. அறிவார்வமும் செயலார்வமுந்தான் ஒருவனை உலகை யறியவும் தன்னையறியவும் தூண்டுகின்றன. தீமை பற்றிய நல்லறிவு இங்கேதான் தொடங்குகிறது.

தீமை உலகில் புறத்தே காணப்படும் ஒரு பண்பன்று. அது புறப்பண்பல்ல, அகப்பண்பே. அதன் தோற்றத்தை அகத்தேதான் காணமுடியும். அகத்தேதான் காணவேண்டும். தன்னை அறியும் ஒருவனால் மட்டுமே இது முடியும். தவிர, தீமை என்பது காலம்

டம் ஆகிய திசைகளில் எல்லையற்ற பாரிய அளவுடைய ஒரு பண்பன்று. காலம் இடம் ஆகிய திசைகளில் எல்லையற்ற இயற்கையண்டத்தின் ஒரு நேரடிக் கூறும் அன்று. அது