உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

147

தூய்மைக்கேடு, வெறுப்பு, தன்னலம் ஆகியவற்றை உடைய உள்ளம் மயிரிழையளவும் தவறாமல் தீங்கு நோக்கியும் இடர் நோக்கியும் இழுத்துச் செல்லப்பெறும். அது போலவே தூய்மை, தன்னலமறுப்பு, மேதகைமை ஆகியவற்றை உடைய உள்ளம் மயிரிழையளவும் தவறாமல் இன்பம், செல்வ வாழ்வு ஆகியவை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது.

ஒவ்வோர் உள்ளமும் தன் இனப்பண்புக் கூறுகளைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. உள்ளத்தின் இனப் பண்புக எல்லாத எதுவும் புறஉலகில் நின்று அகத்தே புகமாட்டாது. புறஉலகின் அகநிலை உணர்வுத்துறையில் கட்டாயமாகச் செயலாற்றும் தெய்வீகக் கவர்ச்சியாற்றலாகக் கொள்ளத் தக்கது. புற உலகையும், அக உலகையும் இணைக்கும் இத்தெய்வீக அமைதியை உணர்ந்து நடப்பவன், புற உலகத்தை இயக்கியாண்டு தெய்வீக ஆற்றலின் ஒரு கூறாகிறான்.

ஒவ்வோர் ஆன்மாவும் அதன் முன்னைய எண்ணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் ஒரு பல்கூட்டுத் திரளேயாகும். உடல் அவ்வனுபவங்களைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் உரிய ஒரு நிலைக்களக் கருவியே யன்றி வேறல்ல. பழைய அனுபவங்கள் அஃதாவது இயற்கை உணர்ச்சிகள் ஆன்மாவின் அடிப்படை. ஆனால் அவற்றின் வளர்ச்சி புதிய அனுபவங்களைப் பொறுத்தது. அனுபவங்களின் படிப்பினைகளைக் கொண்டு வளரும் அறிவு இப் புது அனுபவங்களையும் வளர்க்கிறது. இவ்வறிவு செயலாற்றினால், மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் நிகழ்ச்சியும் அகத்தின் இவ்வறிவுப் பண்பு மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இது செயலாற்றாவிட்டாலும் அகப்பண்பே புற நிகழ்ச்சியை இயக்குகிறது. ஏனெனில் அகப்பண்புக் கூறுகளின் இயற்கைக் கவர்ச்சியாற்றல் புறத்தே தன் னப்பண்புகளை வளர்க்கிறது. இவ்வகையில் மொத்தத்தில் எப்படியும் ஒருவன் எண்ணங்கள் எவ்வகைப்பட்டனவோ, அவ்வகையிலேயே ஆன்மாவின் இயல்பும், புற உ உயிர்ப்பகுதி, உயிரிலாப்பகுதிகளின் இயல்பும் அமைந்து விடுகின்றன.

உலகின்

"நாம் இருக்கும் இருப்பின் சூழல் நாம் எண்ணிய எண்ணங்களின் விளைவே; அது நம் எண்ணங்களின் மீதே