உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

149

செயலாற்றும். ஏனெனில் மனிதன் தெய்வப் பண்பை நோக்கி வளரும் உயிர்ப் பண்புடையவன். அப்பண்பே அறிவ. அதை அவன் பயன்படுத்தாமல் தன் உயிர்பண்பை அதன் வழி நின்று யக்காமல், புறப்பண்பின் உயிரிலாத் தற்செயல் விளைவில் மிதந்தால், அதற்குக் காரணம் அறியாமையேயாகும். காரண காரியத் தொடர்பை ஆராய முனையாத இவ்வறியாமை யையே நாம் நம்பிக்கை என்ற பெயர் கூறி அழைக்கிறோம்.

அகப்பண்பின் ஆற்றலில் உணர்வுபெறாமல் புறப் பொருளில் நம்பிக்கை வைப்பவன், அவற்றுக்குள் இயக்குதல் தலைவனாயிருப்பதற்கு மாறாக, அவற்றுக்கு அடிமை ஆகிறான். தான் ஓர் அடிமை என்று ஒத்துக் கொண்டு, அவற்றுக்கு அடங்கி நடக்கிறான். அறிவொளியுை மனிதனாய்ப் பிறந்தும், அவன் அறியாமை இருளாகிய மாயையில் உழலும் விலங்குப்பிறவியாகிறான்.புறப்பொருள்கள் அவன் அறிவுக்கு அறிவு கொளுத்தும் அறிவுப் பிழம்புகளா யிராமல், களிப்பூட்டும் கவின் பொருள்களாமல், ஆற்றல் தரும் ஆற்றல் பண்புகளாக உலவாமல் - துன்பம், அச்சம், தளர்ச்சி ஆகிய இருட் பண்புகளூட்டும் மாயப் பொருள்களாகின்றன.

ஒளிப்பண்பு அல்லது அறிவுப்பண்பு, இருட்பண்பு அல்லது அறியாமைப் பண்பு ஆகியவற்றின் இருவேறு பட்டபயன்களை நாம் வாழ்க்கையில் தெள்ளத்தெளியக் காணலாம். இவற்றை விளக்கப் பல சான்றுகள் தரலாம். என் அனுபவத்தில் பட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே கூற விரும்புகிறேன்.

இளைஞர் இருவர் பல்லாண்டு உழைத்துச் சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்து தவிப்படைந்து நின்றனர். ஒருவன் அத் துன்பத்தில் ஆழ்ந்து, அதே சிந்தனையாயிருந்து, உடல் குன்றி, ஊக்கமிழந்து நலிந்தான். ஆனால் மற்றவனோ ஒருநாள் துயரில் ஆழ்ந்திருந்து, மறுநாள் விடியற்காலமே பத்திரிகைகளைப் புரட்டிப்புதுவாழ்வுக்கு வழிகாணப் புகுந்தான். தன் இழப்புப்பற்றிப் பரிந்துரை கூற வந்தவரிடம் “வாழ்வு தாழ்வு எவருக்கும் வருவது இயல்புதானே! இத்தடவை இழப்புக் காளானவன் நான் மட்டுமல்ல. பலரும் ஆளாகியுள்ளனர். கடும் உழைப்பால்தான் இனி, காரியம் ஆகும்,” என்று கூறினான்.