உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

அப்பாத்துரையம் - 43

படர்ந்து உயிர் ஆற்றல்கள் ஆகின்றன. இவ்வுயிராற்றல் முனைத்தெழும் ஆற்றலன்று; அக நின்றுவளரும் ஆற்றல்! புறநின்று வளரும் ஆற்றலன்று; அக நின்றுவளரும் ஆற்றல்! எதிர்த்தழிக்கும் ஆற்றலன்று; தாங்கி நின்று அழிக்கும் ஆற்றல்!

பேரவா, கோபம், அழுக்காறு, குறுகிய தன்னல முனைப்பு ஆகியவை இயற்கையின் அழிவாற்றல்களுக்கு ஒப்பானவை. அவை அந்நொடியில், அன்று வலிவுடை யவை. ஆனால் அவை காலத்தில் நின்று அழிபவை. அடங்கிய அமைதி ஆற்றல்களாகிய வீரம், தன்னடக்கம், பொறுமை, தியாகம் ஆகியவை நின்று வெல்வது உறுதி.

பழங்காலக் கிறித்துவ உலகின் சமயப் பெருந்தலைவர் (போப்) ஆணையையும் பேரரசர் கட்டளையையும் கண்டு மார்ட்டின் லூதரின் நல்லன்பர்கள் நடுநடுங்கி, அவ்விடம் செல்லவேண்டாம் என்று அவரைத் தடுத்தனர். புயல் கண்டு நடுங்கிய பாறைகளாகவே அவர்கள் காட்சியளித்தனர். ஆனால் புயலிடையே புகுந்து அதன் ஆற்றலில் உடையாமல் மீண்டும் தலைநிமிரும் நாணற் புல்லின் தன்மை லூதரிடமிருந்தது. அவர் பணிவுடன், ஆனால் அமைந்த வலுவுடன், “மோட்டில் உள்ள ஓடுகளைவிடப் பலவான அச்சந்தரும் பேய்கள் ஓம்ஸ் நகரில் இருந்தால் கூட இருக்கட்டும், நான் அதற்காகப் போகாமலிருக்கப் போவதில்லை!” என்றார்.

பிரிட்டனின் அரசியல் மாமன்றத்தில் பெஞ்சமின் டிஸ்ரேய்லி முதல்நாள் அடைந்த தோல்வி பெரிதாயிருந்தது. மன்ற முழுவதும் அதுகண்டு கைகொட்டி நகைத்தது. ஆனால் அவர் "இதே மன்றம் திறந்தவாய் மூடாது என் பேச்சின் ஒவ்வோர் எழுத்தையும் கேட்கும் நாள் ஒன்று உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அன்று கூறினார். அக்கூற்றுப் பொய்க்கவில்லை என்பதை வரலாறு காட்டும்.

பேராறுகள் சிற்றோடைகளாகவும், சிற்றோடைகள் சிறுநீர்க் கசிவுகளாகவுமே தொடங்குகின்றன. அதுபோலப் பேராற்றலும் சிறுதிற ஆற்றல்களிலிருந்தே பெருக்க மடைகின்றன. செயற்கரிய செய்து முடிக்கும் திண்பேராற்றல், அறிவாற்றலின் விளைவேயாகும். பயனற்றனபோலத்