உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

197

தோன்றும் சிறு பயன் உடைய சிறுதிறக் காரியங்களில் பெறும் பயிற்சி அறிவைத் தரும். அவ்வறிவே பெருந்திறங்களில் செயல் வெற்றிகாணும் பெருந்திறங்கள் ஆகும்.

அடங்கிய, அமைந்த ஆற்றல்களுள், தலை சிறந்த ஒன்று நகைமுகம், புன்முறுவல்! அழிவாற்றல்களுள் ஒன்று, அடங்காச் சிரிப்பும் ஏளனமும்! முன்னது அறிவை வளர்க்கும். பின்னது அறிவு அகன்ற இடத்திலேயே தோன்றும். திட்டமிட்ட, ஒருமுகப்பட்ட செயல் அமைந்த உள்ளத்தின் விளைவு. அது பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றுக்கு மூலவிதை. இரண்டுபட்ட உள்ளம், இருதலை நோக்கம் சிதறிய வாழ்வின் சின்னம். ஒன்றுபட்ட உள்ளம் உள்ளத்தின் உட்குரல் கேட்டு நடக்கும். இரண்டுபட்ட உள்ளம் புறக்குரல்கள் கேட்டுச் சிதறிய வாழ்வுடையதாயிருக்கும். ஒன்றுபட்ட உள்ளம் உள்முகநோக்கி இயற்கையின் அமைந்த ஒருமை உள்ளங்காணும். இரண்டுபட்ட உள்ளம் அதன் பன்முகத் தோற்றங்களில் சிதைவுற்று, அழிந்து இயற்கையின் புறப்பொருள்களுடன் ஒன்றுபட்டு ஒடுங்கும்.

இயற்கையின் அமைதி உயிர்களின் உள்ளத்தில் உளநலமாகி, உடலில் உடல் நலமாகிறது.

பாதையோ பல, வாயில்கள் பலப்பல; சூழப்

படர்ந்து நின்றன, கிடந்தன, பார்க்கும் என்முன்னே; விதியாம்சில, விரிவிலா தொடுங்கிய சிலவே; மேனிமிர்ந்தன, தாழ்ந்தனசில; சில நடுங்கும். ஊதை செல்வன, வெய்துயிர்ப்பன; இளங்காற்றின் உலவுகாவனம் ஆயினசில; சில ஒளியின் போதவிழ்வன, சில இருள் அடர்வன; இவற்றுள் போதல் சாலும் கால் விரைந்திட, மெல்லென இனியே!

உறுதி வாய்ந்த நல்நெஞ்சொடு செல்லுவன்யானே,

உளத்து வாய்மையும் தூய்மையும் துணைக்கொள அமைத்தே! பொறுதியோடு உயர் தோங்கிய நல்வழிகண்டே பூம்பொழில்தடம் நண்ணுவன், பூம்பொழில் நெறியின் இறுதிமுள் திரள் வெந்துயர்ப் படுகர் என்றுணர்வேன்;

(1)