உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அப்பாத்துரையம் - 43

எனது நெஞ்சத்தில் ஏக்கமும் தயக்கமும் கண்டால், மறுதி கைச்செலும் அகல்நெறி அது இனிதென்றே மருட்டுவார் வழி மயங்கிட நேரும் என்றறிந்தே!

முடிவில் இன்பமே முடிவினில் பெற்றிட உள்ளம் முனையும், ஆதலின் முனைந்திலேன் கணந்தரும் இன்பம்! நெடிது செல்லுறும் காலத்தின் ஒவ்வொரு கணமும் நிமிர்ந்து நோக்கிமெய்ப் பயனுற நாடுவன் பெரிதே! உடல்நலம் உளநலம் திரு வீறுடன் வெற்றி உறுதியாக நான்பெற் றிருவேனெனும் உணர்வால், கடுமைநோன்புடன் கடிதெலாம் பொறுப்பன், தீ நெறியில் கால்சறுக்குறா தொவ்வொரு கணமும் கண் விழித்தே! துன்பம்ஓய, மெய்யின்பத்தின் ஆர்ஒளிதோயத் தூய உன்உளம் நாடிய தாதலினாலே, மன்பதைக்கெலாம் வெற்றியும் வாழ்வுமே வகுக்கும் மாசிலா ஒரு தூநெறியதன் தடம்பிறழேன்! என்பிழைக்கினும் பிழைத்திடா அந்நெறி வளையாது என்றும், ஆதலின் அதன் வழிநின்று நான் வளைந்தே இன்ப துன்பமும் வெற்றியும் தோல்வியும் படியாய் இடைவிடாது ஒளிபெற்று உயிர் வெற்றியில் மடுப்பேன்.

தன்னலத்துடன் ஆணவம் தடங்கெட அழித்துத் தாழ்ந்த மென்பணி வமைதியில் செல்லுவன்யானே! தன்ன தென்றிடும் உரிமையும் கட்டளைத் தருக்கும் தவிர்த்து மெய்அறிவறிவுறும் ஆர்வத்தில் திளைப்பேன்! பன்னலங்களும் பண்பினில் ஒத்துமெய்யின்பப்

(2)

(3)

(4)

பாதையே சென்று சேர்ந்திடும், ஆதலினாலே

இன்னலங்கொடு தனித்தனி சிறுசெயலதுவும்

இழைப்பன், இன்னலிற் பிழைப்பன், பேரின்பத்தில் இழைந்தே!

(5)