உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. அமைதிநெறி

1. கருத்தின் ஆற்றல்

உண்முகச் சிந்தனை ஒன்றே உலகளாவிய உயிர் ஒளியைப் பெறுவதற்கான நெறி. மேலோர்கள் யாவரும் நோக்கத்துடன் விரைந்தேறிச் சென்ற மறைநிலை அக அறிவின் ஒளியக ஏணி அதுவே. கீழோர்களும் முன்னோ, பின்னோ; இடறிவிழுந்தோ, டையறாது தேடியோ, இறுதியிற் சென்று தட்டித் தடவிப் பிடித்தேற வேண்டிய இருள அனுபவ ஏணியும் அதுவே. தன்னை மறுத்துத் தன் சூழலையும் அடக்கியாண்டு மறப்பவன் எவனோ, அவனே அதன் பொற்படிகளில் காலூன்றுகிறான்.மனம் என்னும் உள்ளத்தின் காலடி அதனில் பற்றியவுடனே உள்ளுணர்வு எனும் அதன் கண்நோக்கிற்கு மங்காத நிறை அமைதியின் ஒளி தென்படும். ஊனக் கண் காணும் ஊறுபடு காட்சி மறைந்து உயர் வானக்கண் காணத்தக்க வாய்மையின் நிறை நீளொளி எங்கும் பரவி ஒளிரும். திருநிலை வானரசு, திரு நிலை வடிவழகு, திருநிலை இன்பம், தூய திருநிலை நிறை இசை ஆகியவை தன்னை மறுத்தவன் உள்ளுணர்வு ஒன்றினாலன்றி எய்தப் பெறமாட்டா.

சிந்தனை என்பது அமைதியின் செல்வம். அமைதி

பேணியவன் எண்ணங்கள் ஒருமுகப்பட்டுச் சிந்தனை ஆகின்றன. பொதுப்படையாகப் புறப் பொருளை ஒருவன் பார்க்கிறான், காண்பதில்லை. பார்வை மேற்போக்கானது; அதில் அகத்தின் கருத்துத் தோய்வதில்லை. காட்சி பொருள் களின் பண்பு அல்லது அகக் கூறுகளைக் கவனிக்கிறது. பண்புக் கூறுகளின் தொடர்புகளில் காண்பவன் கருத்துச் செலுத்தும் போது அவன் காட்சி நோக்கு ஆகிறது. பலவழி நோக்கி ஒருபொருளை முற்ற உணர்வதே சிந்தனை ஆகும்.