உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

219

ஒருபொருளைப்பற்றி இடைவிடாது ஆழ்ந்து சிந்திப்பவன், அப்பொருளே ஆகிறான். அஃதாவது அவன் அகத்தில் அப்பொருளின் அக உருவம் அஃதாவது பண்பு வடிவம் கட்டமைகிறது. அவ் அகப்பண்பே பொருளின் உயர்நிலையா தலால், அதனை இயக்குவதன் மூலம் அவன் பொருளையும் பொருளுலகையும் இயக்குகிறான்.புறப்பொருள்கள் மட்டுமன்றி, உயிர்களும் இங்ஙனம் அகநிலைபோல் முழுதும் உணர்ந்து இயக்கப்படத் தக்கனவே.

தன்னலமுடையவன் புறப் பொருள்கள்மீதும் புற உயிர்கள்மீதும் தன் தன்னலத்தை, ஏற்றி அவற்றை அல்லது அவர்களைப் பகைப்பண்புகள் ஆக்குகிறான். சூழல் இவ்வாறு அவனுக்கு எதிராகிறது. ஆனால் பொது நலமுடையவன் நிலை இதற்கு நேர்மாறானது. அவன் உள்ளத்தின் பெருமிதப் பண்பு சூழுள்ள யாவரையும் பெருமிதப் பண்புடைய நண்பர் ஆக்குகின்றது. பொருள்களும் இது போலப் பயனுடையவை ஆகின்றன. ஏனெனில் பொருள்களின் பண்புகளையும் பண்புத் தொடர்புகளையும் அவன் முழுதும் அறிவதால், அவற்றின் பயனோக்கி அவற்றைக் கையாள முடிகிறது. காலில் குத்தும் முள்ளை அவன் முள்ளெடுக்கப் பயன்படுத்துவான். தாள் துண்டுகளை அறுக்கும் கத்தியைக் காலில்பட்டு அதை அறுத்துவிடும்படி அவன் விட்டுவைக்கமாட்டான்.

நோக்கமுடையவன் நோக்கி முழுதுணரும் பொருளையோ காட்சியுடையவன் பகுதியளவு காண்பவன். நோக்கமும் காட்சியுமில்லாவிடினும் கண் தன்னியல்பில் பார்க்காம லிராது. அதுபோல நோக்கமும் அமைதியும் பேணி ஒரு முகமாகச் சிந்திக்காதவன் வகையிலும் உள்ளம் வாளா இருப்பதில்லை. அது தன்னியல்பாக ஓய்வு கிடைத்த வேளையிலெல்லாம் சிந்திக்கவே செய்யும். ஆனால், நோக்க முடைய சிந்தனைக்கும் இந்த இயல்பான சிந்தனைக்கும் வேறுபாடு உண்டு. நோக்கமுடையவன் சிந்தனை பொருளின் பயன் நோக்கி அதைக் கையாளும். நோக்க மற்றவன் சிந்தனையோ பொருளுலகின் பண்படா அவாக்க ளென்னும் சுழல் காற்றுக்களில் அலமரும். செயலற்ற ஓய்வு நேரங்களில் எவ்வளவு பண்பாடற்றவரும் இத்தகைய