276 ||
அப்பாத்துரையம் - 43
ஆயினும் காலைவானை விட மாலைவானம் கனிவுடையது. அதுபோலவே குழந்தைப் பருவ ஒளிமையைவிட, வாய்மையின் ஒளிமை முதிர்தீங் கனவின் மோனஎழில் நலம் வாய்ந்தது.
உலகின் வளைவு நெளிவுச் சிக்கல்களைக் கண்டு வாய்மை நோக்காளன் நகை பூத்து நிற்பான். எளிய வழிகளில் அவன் ழைவான். ஆனால் உலகமோ சிக்கல் உணர மாட்டா எளிய அறிவுநிலையினன் என்று அவனை ஏளனம் செய்து நகும். ஆயினும் சிக்கல் உணர்பவர் கடுமுயற்சி யினாலும் அடையா வெற்றிகளை அவன் கிட்டத்தட்ட முயற்சியில்லாமல் எளிதில் அடைவான். விலங்கியல்புடைய அறிவிலார் வழியைவிட மனிதர் அறிவுவழி எவ்வளவு உயர்வுடையதோ, அவ்வளவு உலகின் அறிவுவழியைவிட அவன் வாய்மைவழி உயர்வுடையதாயிருக்கும். அதையடைந்தபின் கழிவிரக்கம் இராது. மனக்கசப்பிராது. ஏமாற்றங்களும், துன்பங்களும் நேரமாட்டா. நிகழ்வது எதுவாயினும் அவன் மனம் காற்றசைவில்லாதபோது அமைந்து நின்று ஒளிரும் விளக்குப்போல நிலவும். உலகின் மாறுதல்களிடையே, அவன் மாறாது உலைவில்லாது உலவுகிறான்.
உலகின் போக்கில் புறத்தோற்றத்தில் தீமைப்புயல் எவ்வளவு நீடித்ததாகத் தோன்றினும், அது ஆடியமர்ந்து ஓய்வது உறுதி. ஆனால் வாய்மையாளன் தன்னடக்கம் உலகின் அமைதியை விரைவில் கொண்டுவர அவனளவில் ஒருபடி உதவாமலிருக்க முடியாது. அதற்குமேல் அவன் என்ன விரும்பமுடியும்? ஆகவே அவன் அமைதி இருமடங்காகிறது. அவன் தன்னமைதி பெறுகிறான். உலக அமைதியை உறுதியாக நம்புகிறான். அவ்வமைதியை விரைவுபடுத்தத் தான் தன்பங்கு உழைப்பைச் செய்ததாக உணர்ந்து அவன் மனநிறைவு பெறுகிறான்.
உவகையின் அழுகையின் ஊடாக
உயிர்ப்பிடை அயிர்ப்பிடை ஊடாகி, மடிமையிலே நல் உழைப்பினிலே மறிதர மறிதர ஊடாடி,
கடமையின் பண்பினில் பழியினிலே கருமுதல் கடைவரை பாவாடி