உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

-

275

தன்மையை அறிவிக்கும் கருவிகள். அவை கண்ணாடிகள் போல அவனுக்கு அக உலகின் - அஃதாவது உள்ளத்தின் தன்மை களையும் கூறுகளையும் காட்டுகின்றன. ஆனால் புலனடக்காமல், அவாவடக்காமல், அகக்கூறுகளின் தொடர்பையோ, அதன் மூலம் புறமாறுதல்களின் இணைப்பமைதியையோ அவன் காண மாட்டான். தன்னுறையில் தானுறங்கும் பூச்சிக்கூடு அதன் மூலம் தனக்குரிய புதிய மெய்யுருவம் பெறுதல்போல, புலனடக்கம் உடைய மனிதன் தன் மெய்ந்நிலை வடிவம் பெறுகிறான்.

நீ தன்மறுப்புப் பயில்க. கீழின உயிர்களுக்குரிய அவல அவாக்கள் துறக்க புல இன்பங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை அடக்கி இயக்குக. நற்பண்புகள் மேற்கொண்டு ஒழுகுக. நாளடைவில் நற்பண்புகள் தாமே வளரும். அமைதி ஏற்படும். அகநோக்கு உண்டாகும். மெய் இது, பொய் இது என்று திரித்துணரும் பகுத்தறிவு இதனால் உண்டாகும்.

உலகு, உடல், தன்முனைப்பு ஆகியவற்றின் புறத் தோற்றங்கள் பாலைவனத்தின் கானல் தோற்றம் போல்வன. அக நிலைத் துயிலிடையே தோற்றும் கனாக்கள் அவை. வாய்மை எனும் நனவொளி பட்டதும், நனவுலகத் தென்றல் வீசியதும், அவை தடங்கெட மறையும். அவற்றினிடத்தே ஒரே அன்புப் பேரமைதி தோன்றும். புலனறிவு கடவாத, அறிவு காணாத மெய்ம்மையை அது கண்டு திளைக்க வைக்கும்.

வரம்பிலா நிலையான மெய்ம்மையை அடைந்தவன் காலத்தின் செயலைக் கடந்துவிடுகிறான். உடலையும் உலக மாறுதலையும் தாண்டி விடுகிறான். இருளுலகின் எல்லை கடந்து ஒளியுலகில் அடியெடுத்து வைக்கிறான். அகநிலை ஒளியின் பேரரசாட்சியில் அவன் அழியா இன்பவாழ்வு எய்துகிறான்.

வாய்மையைச் சென்றடையும்வரை அதற்குரிய வழி சிக்கல் வாய்ந்ததாய் இருக்கலாம். ஆனால் வாய்மை சிக்கல் வாய்ந்த தன்று; சிக்கலற்றது. இளமையும் முதிர்வும் கடந்தபின் சாரும் முதுமை குழந்தைப் பருவத்தை ஒத்ததாயிருப்பது போல, கடும் பகல் நீங்கிய மாலைச் செவ்வொளி காலைச் செவ்வானுடன் ஒப்புடையதாயிருப்பது போல, நிறை வாய்மையும் கிட்டத் தட்டக் குழந்தைப் பருவத்தின் ஒளிமையின்பம் உடையது.