உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(274) ||.

அப்பாத்துரையம் – 43

தசையுடல் மாயும் இயல்புடையது என்பதை யாவரும் அறிவர். ஆயினும் அம்மாய்வுபற்றி அவர்கள் அச்சமும் வெறுப்பும் கொள்ளாமலில்லை. எனினும் அஞ்சிப் பய னில்லை என்பதனால் அதை மறந்து, நினைவிலிருந்து ஒதுக்கி வாழ எண்ணுகின்றனர். இது ஓரளவு ஏற்புடையதே என்னலாம். ஆனால், அவர்கள் தன்னலம் பொருளற்றதாக்குகிறது. கடைசி நொடிவரை தன்னலமே அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. ஒதுக்கிடும், மறுப்பும், உண்மையை மறைத்து விடுவதுடன் நிற்கவில்லை. மறுத்துக் கருத்துமாறாட்டமே செய்து விடுகிறது.

அவ்வொதுக்கீட்டைப்

உயிர்நிலையானது; ஆனால் உலகும் அதுபோல நிலையானதே என்ற வாதத்தால், தன்னல வாழ்வுக்குச் சிலர் சப்பைக்கட்டுக் கட்டப் பார்க்கிறார்கள். நிலையான உயிரின் தன்மையை அறியவொட்டாமல் நிலையற்ற உடல் தடுப்பது போல, நிலையான உலகின் தன்மையை அறிய விடாமல், அதன் மாறுபடும் புறவடிவம் தடுக்கிறது. என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. அகநோக்கின்மையும், அமைதியின்மையும் இவ்வகையில் அவர்களுக்குச் சிந்தனை எழாமல் தடுக்கிறது. தன்னுணர்வைத் தன்முனைப்பு மறைக்கிறது.

நிலையற்ற இன்பங்கள், புலனுகர்வுகள் பெருகப் பெருக, துன்பவிதையும் அகல விதைக்கப்படுகிறது. அத்துடன் அகத்தேயுள்ள தெய்விக அன்பொளி வரவர ஆழ்ந்து மறைக்கவும் படுகிறது. உலகியல்பற்று உலகின் காரண காரியத் தொடர்பை - அஃதாவது மாறுபடும் உலகிலுள்ள மாறுபடா இயற்கை யமைதியை - திரையிட்டு இருட்டடிக்கிறது. எல்லாம் தற்செயல் நிகழ்ச்சிகள், குருட்டுயோகங்கள் என்ற நினைப்பால் அறிவற்ற, செயலற்ற வாழ்வில் மனிதன் மிதக்கத் தொடங்குகிறான். செயல் முறைக்கு ஒவ்வா முரண்படும் பல கோட்பாட்டுச் சிக்கல்களையும், அறிவுச் சிக்கல்களையும் அவன் அறிவெனப் பற்றுகிறான்.

இயற்கையின் மாறா அடிப்படை அமைதித் தத்துவம் ஒன்றே. ஆனால் அதன் மாறுபடு தோற்றங்கள் மிகப்பல.எனினும் இந்தத் தோறறங்கள்தான் அவனுக்கு அம் மாறா அடிப்படையின்