திருநிறை ஆற்றல்
(273
தில்லை. பறந்துசென்றே பெறுகிறது. ஆயினும் எப்படியும் அதன் உணவுத் தாயகமும், ஓய்வுத் தாயகமும் நிலமே! இதுபோல ஒரு மனிதன் செயலுலகில் பெறும் இன்பங்கள் மிகச் சில. அவையும் மாறா ஓய்வுலக இன்பத்தின் திரிபுகளே. செயலுலகில் உழைப்பதனால் அவன் உடல் வளர்ச்சியடைகிறது. அவ் வுடலின் ஒரு கூறாக அறிவுள்ளமும், இன்பந்துய்க்கும் உள்ளமும் ஓய்வுக் காலத்திலேயே அறிவு நாட்டமும் இன்ப நாட்டமும் கொள்ள முடியும். உள்ளமும் ஓய்வு பெற்றாலல் லாமல், இந்த இன்பத்தை முழுதும் துய்க்க முடியாது; உண்மையான இன்பத்தின் தாயகம் இவ்வமைதியேயாகும். அது செயல்துறை சார்ந்ததன்று; அது கடந்தது. புறத்திலிருந்து வருவது அன்று, அகத்திலிருந்து வருவது. செயல் கடந்த இயற்கை அமைதியிலிருந்து செயலிடை ஓய்வமைதி பெற்ற அக அமைதியில் அது தன் நிலவொளி வீசுகிறது.
எல்லாச் சமயங்களின் பொதுத் தாயகக் களம் இதுவே. இதுவே எல்லாக் கருத்துக்களும், கோட்பாடுகளும், எல்லா முரண்பாடுகளும் வந்து ஒடுங்கும் மூலப் பெருவெளி. எல்லா மனிதர்களின், எல்லா உயிர்களின் வாழ்வு தாழ்வுகளைக் கடந்த நிலையான முடிந்த இன்ப இலக்கு இதுவே. இதனை உணர்ந்த பின்தான் உயிர்கள் தம் உள்ளார்ந்த மெய் இயல்பை உணரவல்லன. வரம்புபட்ட உலகில் வாழ்ந்தாலும், மனிதன் இத்தொடர் பினால்தான் வரம்பிலா மெய்ம்மையில் தான் ஒரு சிறுதுணுக்கு என்பதைக் காண்கிறான். துயிலில் கனவுலகில் திரியும் ஒருவன் திடுமெனத் துயில் நீங்கி நனவுலகைக் காண்பது போல், நிலையான மெய்ம்மையாகத் தோற்றும் நிலையற்று போல், நிலையான மெய்ம்மையுலகிலேயே தான் இருப்பதை உணர்கிறான். அதுவே தனக்குரிய மெய்யுலகு என்பதையும் அறிகிறான்.
வரம்பிலா மெய்ம்மை ஓர் எல்லையற்ற கடல். மனிதன் அதன் ஒரு திவலை. உலகியல் உணர்வு என்ற திரை கடலிடையிருந்து திவலையை மறைத்து அதைத் தனி வாழ்வுடைய ஒருசிறு பொருளாகக் காட்டுகிறது. ஆனால் திவலை கடலகத்தின் ஒரு நுண்கூறு. அது கடலின் அகண்டமான பரப்பிலே இரண்டறக் கலந்தபின்தான் தன் இயல்பை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறது.