உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அந்தமில் இன்பம்

உலகப்பொருள்கள் யாவும் காலவரையறை, இட வரையறை உடையன; மாறுவன, மாய்வன. ஆயினும் மனிதன் தொன்று தொட்டுக் கால எல்லையற்ற, இட எல்லையற்ற, மாறாத, மாயாத ஒரு பண்பை அவற்றி னூடாகக் கண்டு வந்திருக்கிறான். மாறும் பொருளிடையே மாறும் பொருளாக அவன் செயலாற்றும் வேளைகளிலெல்லாம் அவன் மாறுபாட்டையே உணர்கிறான்.ஆனாலும், செயலிடை அமைதி தோன்றித் தன்னைப் பற்றிய சிந்தனையால் தன்னுணர்வு பெற்ற நேரங்களிலெல்லாம், மாறுபடாத அவ் அகப்பண்பில் உலவ அவன் தவறியதில்லை.

வானகத்தில் ஓயாது சிறகடித்துப் பறக்கும் சிறு பறவை, ஓய்வுநாடும் நேரத்தில் கட்டாயமாக இறங்கி நிலத்தில் வந்து தன்நிலை பெறுதல்போல, அவனும் அச்சமயத்திலேயே தன் தனிநிலை பற்றிச் சிந்திக்கிறான். பறக்கும் பறவை தனக்குப் பறப்பதற்கான சிறகு மட்டுமன்றி, நிற்பதற்கான காலும் இருப்பதையும்; தான் உண்ணுவதற்கான இரைகள் பெரிதும் பறக்கும் வானிலில்லை. நிற்கும் நிலத்திலேயே உள்ளது என்பதையும் நிலத்தில் அமரும் போதுதான் காணும், வானம் அதன் வாழ்விடம்தான்; ஆனால், வாழ்வின் தாயகம் நிலமே. மனிதனுக்கும் அதுபோலச் செயல் வாழ்க்கை ஒரு கருவி மட்டுமே. அவன் தாயகம் ஓய்வு. செயல் துறையில் அல்லது கருவித் துறையில் அவன் மாறுபடும் உலகமாகிய வானில் உலவுகிறான். ஓய்வு அல்லது தாயகத் துறையில் மாறுபடாப் பண்பின் தோய்கிறான்.

பறக்கும் பறவைகளில் சிலவற்றுக்கு அல்லது சில போது பறக்கும்போதே இரையகப்படுவதுண்டு. நிலத்திலும் தொலைவில் உள்ள உணவை அது நடந்து சென்று பெறுவ