உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

செடிகொடிகள் தோன்றி, உரங்கொண்டு மண்ணாகி உயிர் புதுக்கல் கண்டேன்!

வானகத்தின் சிறுதுளிகள் மலைப்பாறை தேய்த்துக்

கானகமும், உயிரினமும்

கடுகவளர்த் துலகம்

தானாக்கும் நிலைகண்டேன்;

தளிர்நுனியும், வேரும்

மால்நிலைய காழ்வயிரம்

துளைத்திடுதல் கண்டேன்!

கண்டுணர்ந்தேன் புயலனைய

கடுஞ்சீற்றம், அச்சம்,

மண்டுபகை, பழிகௗவை

மலையென நின்றெழினும்,

துண்டுபடும், தேயும்உளம்;

உட்கனியும் கனிவால் எண்டிசையும் இன்பமெழும் இறையருளால் என்றே!

(271

(2)

(3)

(4)