உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 45

இயந்திரங்கள் உழைப்பவர் தொகையைக் குறைக்கின்றன. உற்பத்தியைப் பிரமாண்டமான அளவில் பெருக்கி, உலக விற்பனைக் களத்தையே இயந்திர முதலாளிகள் ஆட்டிப் படைக்கும்படிசெய்கின்றன.

தொழிலாளியைப் பொறுத்தமட்டில் இயந்திரங்கள் அவன் வாழ்விலும் அவன் உழைப்பின் மதிப்பிலும் பெரும் புரட்சி செய்துள்ளன. இவற்றை உணர நாம் மீண்டும் சரக்குகளின் பக்கமாக நம் கருத்தைச் செலுத்த வேண்டும்.

தொழிற் புரட்சி

பண்டமாற்றில்

வாங்குபவன், விற்பவன்

என்ற

வேறுபாடோ, ஆதாயம் பெறுபவன், நட்டமடைபவன் என்ற வேற்றுமையோ இல்லை. ஆனால் வாணிகமாற்றில் இவ் வேறுபாடுகள் உண்டு. இது காரணமாகச் சமூக உறுப்பினரிட மில்லாத ஆதாயம் என்ற ஒரு புதுநோக்கு வணிகர் என்ற ஒரு புது வகுப்பைத் தோற்றுவித்தது.

தொழில் துறையிலும் தொடக்கக் கால சமூகத்தில் தொழிலாளி தொழிலாளியாக மட்டுமின்றித் தன் தொழிலுக்கும் தொழிலுழைப்பின் பயனான சரக்குக்கும் தானே உரியவனாயிருந்தான். பொருளாதார வகையில் தன் செயலும் தன் உரிமையுமற்ற ஒரு தொழிலாளி வகுப்பு; அவனையும் அவன் தொழிலையும் தன் உரிமையாக்கிக்கொண்ட ஒரு முதலாளி வகுப்பு; முதலாளி சார்பில் நின்று தொழிலாளியை இயக்கித் தொழிலை வளப்படுத்த உதவும் அறிவு வகுப்பு ஆகிய வகுப்பு வேறுபாடுகள் அப் பழங்காலத்தில் ஏற்படவில்லை.

யில்லாமல்

மனித சமுதாயம் ஒரே சமுதாயமா சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபாடு இருந்ததனாலேயே ஆதாய நோக்கும் வணிக வகுப்பும் ஏற்பட இடமேற்பட்டது என்று மேலே காட்டியுள்ளோம். இவர்களே பொருளியல் துறையில் முதல் முதலாளிகள் ஆவர்.

தொழில்துறையில் முதலாளி வகுப்பு என்ற ஒரு புதிய வகுப்புத் தோன்றுவதற்கே இதுபோலப் பல இயற்கையான காரணங்கள் உண்டு. அவற்றை உணராமல் முதலாளித்துவ