உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

29

இங்கிலாந்திலும் வளர்ந்தது. ஆனால் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொழிற்புரட்சியை ஏற்படுத்தியது கைக்கருவி வளர்ச்சியல்ல; இயந்திரப் பொறிகளின் வளர்ச்சியே ஆகும்.

இயந்திரப் பொறிகளில் மூன்று பகுதிகள் இருப்பதை நாம் காணலாம். ஒன்று கைக் கருவிகளையும் கையையும் நினைவூட்டுவது. இதுவே தொழிலாற்றும் பகுதி. இது பல வகையிலும் அவ்வத் துறையில் முன்பிருந்த கைக்கருவிகளின் திரிபுகளாகவே அமைந்துள்ளன. இயந்திரவாள் பேரளவில் வாளையும், இயந்திரச் சுத்தியல் பேரளவில் சுத்தியலையுமே ஒத்திருந்தன. ஆனால் மனிதர் கை உறுப்புகளைவிட அவை வலிமையுடையவையாகவும், ஒரே ஒழுங்காக வேலைசெய்யும் திட்பமுடையவையாகவும், ஓய்வு ஒழிவின்றித் தொடர்ந்து தளர்வில்லாமல் வேலைசெய்யக்கூடியவையாகவும் அமைந் துள்ளன.

இயந்திரப் பொறியின் இப்பகுதியை அதன் கருவிப் பகுதி

என்னலாம்.

இரண்டாவது இயந்திரப் பொறியின் பகுதி இயந்திரம் ஆகும். இது இயக்கும் திறம் அல்லது ஆற்றலைத் தருவது. தொடக்கக் காலப் பொறிகள் இயந்திரமே இல்லாமல், கையினால் ஓட்டப்படுபவையாகவே இருந்தன. ஆனால் பழைய கைக்கருவியில் மனிதன் கையே முழு வேலை செய்தது. இங்கே கை சக்தியை மட்டும் தந்தது. இருந்தபோதிலும் பொறியின் அமைப்பு மனிதன் சிறு சக்தியைப் பலமடங்கு பெருக்கத் தக்கதாயிருந்தது. மிதிவண்டி, தையல் பொறி ஆகியவை இன்றும் பேரளவில் இயந்திரமில்லாத தற்காலப் பொறிகளின் பண்பை நினைவூட்டுபவையாக உள்ளன. காற்றாற்றல், நீராற்றல் நீண்ட காலமாகப் பழக்கத்திலிருந்து வருகிறது. ஆனால், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் ஊர்திகளுக்கே இது பயன்படுத்தப் பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இது தொழிலில் பயன்படுத்தப் பட்டபின்தான் தொழிலில் புரட்சி ஏற்படத் தொடங்கிற்று.

இயந்திரப் பொறியின் மூன்றாவது பகுதியே அதன் சக்தி ணைப்பும் ஒழுங்கும் தரும் பகுதி ஆகும். இதை நாம் ஓடு கூண்டு' என்கிறோம்.