உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28 ||

அப்பாத்துரையம் - 45

தனித்தொழில் இயல்பைவிட்டு, ஒவ்வொரு சரக்கின் உற்பத்தித் தொழிலின் உறுப்புக்களாயினர். எடுத்துக்காட்டாக, வண்டி செய்யும் தச்சர், கொல்லர், நெசவுக்காரர், சாயக்காரர், கயிறு முறுக்குவோர், எண்ணெய் வாணிகர் ஆகியவர்கள் கூட்டாகச் சேர்ந்து அத்தொழிலிலேயே கட்டுப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்த உள்உறுப்பினர் ஆயினர். வேறு சில சமயம் ஒரே தொழில் செய்பவர் ஒரு முதலாளியின்கீழ் ஒன்றுபட்டு அவரவர் தொழில் செய்தனர். நாளடைவில் ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு பிரிவினரும் தொழிலின் ஒவ்வொரு படியைச் செய்தனர். இங்ஙனமாகச் சிறுதொழில் நிலையங்கள் கூட்டுத் தொழில் நிலையங்களாகவும், தொழில் முறைகள் கூட்டுத்தொழில் முறைகளாகவும்' வளர்ந்தன. இன்றளவும் பல தொழில்கள் இத்தகைய கூட்டுத் தொழில்களாகவும் இயந்திர சக்தியுடனோ அது இல்லாமலோ கூட்டுத் தனித்தொழில்களாகவும் இருந்து வருகின்றன.

ஆனால் கூட்டுத்தொழிலில்கூட தொழிலில் முதலாளித் துவம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரமுடிய வில்லை. அதனால் தொழிலுக்கு ஏற்பட்ட வளர்ச்சிப் பண்புகள் பல. அவை கூட்டுறவுப் பண்பு, கருவிகளின் வளர்ச்சி, மூலப்பொருள், விற்பனைக் களவிரிவு, செல்வர் செல்வப் பெருக்கம் ஆகியவைகளே. இப்பண்புகள் இயந்திர முதலாளித்துவத் துக்குரிய சூழ்நிலைகளைச் சித்தம் செய்தன.

முதலீட்டின் வளர்ச்சி

முதலாளித்துவப்

பொருளியலாட்சி உலகளாவி வளர்ந்ததற்குரிய தனிவாய்ப்பு இயந்திரப் பொறிகளின் வளர்ச்சியேயாகும். மனித சமூகத்தில் தொழில்களில் மனிதன் முதன்முதலில் தன் கைகளையும் கால்களையுமே கருவியாகக் கொண்டு உழைத்தான். ஆனால் விலங்குகளைப் போல அவன் தன் உறுப்புக்களுடன் அமையவில்லை. கைக் கருவிகளைப் பயன் படுத்தினான். பண்டையுலகில் பொதுவாகவும், இந்தியாவில் சிறப்பாகவும், தொழிலின் வளர்ச்சி பெரிதும் கைக்கருவிகளின் நயமும், திட்பமும், அவற்றைக் கையாளும் திறமும் சார்ந்தவை யாகவே இருந்தன. 16-17ஆம் நூற்றாண்டுகளில் கருவிகளும் திறனும் கிட்டத்தட்ட இந்தியாவின் சூழ்நிலையளவிலேயே