உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

27

தொழில்களுக்குரிய உற்பத்திச் சாதனங்களை வாங்கித் தமதாக்கிக் கொள்ளத்தக்க செல்வரே தொழில் முதலாளி ஆகமுடியும். உற்பத்திச் சாதனங்களுருவில் தொழிலில் ஆட்சி செலுத்தும் செல்வமே முதலீடு ஆகும். (2) அடுத்தபடியாக பெரும் படிதொழிலுக்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும். தனிப்பட்ட சிறு கைத் தொழிலாளர்களின் தொழில் மரபு வளர்ச்சியடைந்து, மூலப்பொருளும், தொழில் வளர்ச்சியும், தொழிலுக்கு ஆதரவான வாணிகக் களமும் பெருக்க மாக இருக்க வேண்டும். தொழிலுற்பத்திக்குரிய கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

(3)

மேற்கூறிய மூன்று வாய்ப்புகளில் ஒன்றும் இரண்டும் வரலாற்றில் பல நாடுகளில் பல காலங்களில் இருந்ததுண்டு. பண்டை எகிப்திலும், கிரீசிலும் சிறு கைத்தொழில்கள் சிறப்பாக இருந்தன. ஆனால் மக்களில் ஒரு பெரும் பகுதி அடிமை களாகவும் மீந்தவருள்ளும் பெரும்பாலார் ஏழைகளாகவும் இருந்ததால் வாணிகக்களம் விரிவுடையதாயில்லை. தொழிலும் பெரும்படித் தொழிலாக வளரவில்லை. ஃவினிஷியரும் கார்த்தஜீனியரும் இந்தியரும் கடல் கடந்து வாணிகம் செய்தனர். இந்தியாவில் தொழிலும் பேரளவில் வளர்ந்து முதலீட்டுக்குரிய பொருளும் மிகுதியாக இருந்தது. ஆனால், தொழிலில் கருவிகளின் திறத்தைவிடத் தொழிலாளர் மரபுத் திறமும் கூட்டுழைப்புமே முக்கியப் பண்புகளாயிருந்தன. தொழிலில் சிறந்து, வாணிகமும் மேலோங்கிற்று. ஆனால் தொழில் முதலாளித்துவத்துக்கான சூழ்நிலை வளரவில்லை.

இந்தியாவில் சாதிமுறை மரபும் தொழில் குழுக்களின் மரபும் ஏற்பட்டபோது இருந்த அதே சூழ்நிலை 16ஆம் நூற்றாண்டிலிருந்து மேல்நாட்டில் பொதுவாகவும், இங்கிலாந்தில் சிறப்பாகவும் வளர்ந்தது. இந்தியாவில் குவிந்து கிடந்த பெருஞ் செல்வமும் தொழில் வாய்ப்பும், உயர்ந்த வாழ்க்கைத்தரம் காரணமான நல்ல ற்பனைக்களமும் மேனாட்டு முதலாளித்துவத்தை ஊக்கின. இந்நிலையில் தனித்தொழில்கள் பல தொழில் வளர்ச்சி காரணமாக ஒன்றுபட்டு, ஒரு முதலாளியின் கைக்குள் கொண்டு வரப்பட்டன. சில சமயம் ஒரே சரக்கை ஆக்கும் பல தொழிலாளிகள் அத் தலைமையின்கீழ், தம்