உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 45

கைத்தொழில் முதலாளித்துவமும் அதன் அடிப்படையில் 18ஆம் நூற்றாண்டிலிருந்து இயந்திரத் தொழில் முதலாளித்து வமும் தலை யோங்கியுள்ளன.

இப் பலவகை முதலாளித்துவங்களால் தொழிலாளியும், தொழிலும், உழைப்பு மதிப்பும் அடைந்த மாறுபாடுகளை ஆராய்வோம்.

முதலாளித்துவ வளர்ச்சி

பண்டமாற்றின் இடையீட்டுப்பொருளாக சமூகக் கற்பனை யளவாகப் பணம் தோன்றிற்று.ஆனால் தங்கம், வெள்ளி, நாணய வடிவில் அது இடையீட்டுப் பொருளாக மட்டும் நிலவவில்லை. அது பேரத்தில் மற்றச் சரக்குகளை விட மிகுதியான முனைப்புக் கொண்டு, ஆதாயம் தருவதாக, அதாவது பேரத்தின் ஒவ்வொரு படியிலும் வளர்ந்து மற்றச் சரக்குகளையும் அவற்றை வாங்கவோ விற்கவோ செய்யும் மக்களையும் ஆட்கொண்டு இயக்குவதாக வளர்ந்தது. இதுவே முதலீடு பிறந்த வகை - முதலீட்டின் வித்து ஆகும்.

ஆனால், முதலீடு என்பது பணம் மட்டுமல்ல. சேமித்து வைத்து, மக்கள் பொருளியல் வாழ்வை இயக்கத்தக்க பேரளவான பணமே தொழில் முதலீடு ஆகமுடியும். அதுமட்டுமன்று. அவ்வுருவிலும் அளவிலும்கூட அது முதலீடாகச் செயலாற்ற முடியாது.ஏனென்றால் முதலீட்டின் உயிர் நிலைப்பண்பு மக்கள் உழைப்பையும் வாழ்வையும் தனதாக்கி அவர்களை அடிமைப்படுத்தியாளும் ஆற்றலே இது சேமித்துக் குவித்துவைத்த பணத்தினாலும் முடியாத ஒரு செயல் ஆகும். கீழ்நாடுகளில் பண்டு முதல் இன்று வரை பல வடிவில் பணமும், பொன்னும், மணியும் பெண்கள் அணிமணியாகவும், கோயில் கருவூலங்களாகவும், யூதர் போன்ற பணஞ்சேர்த்துக் குவிக்கும் இனங்களின் புதையல் செல்வங்களாகவும், பணப்பெட்டி களாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இக் காரணத்தால்கூட, கீழ்நாடுகள் முதலாளித்துவ ஆட்சி பரவிய நாடுகள் ஆகவில்லை.

சி

க்

முதலாளித்துவ ஆட்சிக்குரிய முதலீடு தோன்றுவதற்கு முக்கியமான சில பண்புகள் வேண்டும். (1) முதலாவது உற்பத்தி