உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

25

ஆகியவற்றுடன் தொடர்புடைய மேய்ச்சல் துறை வாழ்வு ஆகும். இந்தப் படியிலுள்ளவர்களிடமிருந்தே வாணிகத்தின் தொலைப் பண்புகள் தொடங்குகின்றன என்று கூறத்தகும்.

சமூக வாழ்வு என்பது மனித இனத்தின் அடுத்தபடியாகி வேளாண்மைக் காலத்திலேயே செப்பமடைய முடிந்தது. நெல், கோதுமை முதலிய பயிர்கள் மனிதனால் பயிற்றுவிக்கப்பட்டுப் பண்பட்டன. ஊரும், நாடும், குடியும் ஏற்பட்டன. சமூகக் கட்டுக்கள், சமயம், மொழி, கலை, தொழில்கள் இக்குடி யிருப்பமைதியுடைய சமூகத்திலேயே படிப்படியாக வளர்ந்துள்ளன.

குடியமைந்த வாழ்வில் பிற நாடோடி இனங்களிடமிருந்தும் படை யெடுப்புகளிலிருந்தும் சமூகக்கட்டு மீறுகிற தனிமனிதர் தொல்லைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோரியே வல்லாராட்சியும், அதனையடுத்து நில உடைமையாட்சியும் அதன் பின்னர் சமய குருமார் ஆட்சியும் ஏற்பட்டன.

கீழ்நாடுகளிலும் நடுநிலக்கடல் நாடுகளிலும் வாணிகம் தொன்று தொட்டே வளர்ந்திருந்தது. ஆனால் வாணிகம் வாணிகர் குழுவையின்றி உலகையோ மனித சமூகத்தையோ பாதிக்கவில்லை. ஆயினும் பல சமூகங்களில் பிறப்புக் காரணமான குலங்களிடையே வாணிகம், தொழில் காரணமான புதிய குழுக்கள் தோன்றி வளர்ந்தன. எகிப்திலும் நடுநிலக் கடலக நாடுகளிலும் இந்தியாவிலும் இது சாதிப் பொதுவுடைமை முறையாக வளர்ந்தது. வாணிக முதலாளித்துவ வளர்ச்சியாலும் அரசியல் சமுதாய வளர்ச்சிகளாலும் மற்ற நாடுகளில் இது அழிந்துவிட்டாலும், இந்தியாவில் து இன்றுவரை அழியாமலிருந்து வருகிறது. அத்துடன் இந்தியா உலகிலிருந்து தனியாகத் துண்டிக்கப்பட்டு வந்திருப்பதால், அணிமைவரை தனிவளர்ச்சி பெற்று வந்துள்ளது. மேனாட்டுத் தொடர்பே அதன் கட்டுப் பாட்டைத் தளர்த்தி வருகிறது.

மேனாடுகளில் நில உடைமை ஆட்சி பழைய குலமுறைப் பிரிவுகளைத் தகர்த்துவிட்டது.14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நிலவிய வணிக முதலாளித்துவம்' நிலஉடைமை முறையைப் பேரளவு அழித்தது. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை