உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

||_ _ .

அப்பாத்துரையம் - 45

பெற்ற பின்பு இம் முதற்பொருள்கள் மூலப்பொருள்கள்' ஆகின்றன. கருவிகளினுள் காற்றும் கல்லும் கம்புகளும் விலைமதிப்புப் பெறவில்லை. ஆனால் கடப்பாறையும் உளியும் சுத்தியும் கோடரியும் விலைமதிப்புடையவை. ஏனெனில் அவை கொல்லன், தச்சன் ஆகியவர்கள் உழைப்பின் பயனாக

உருவானவை.

மூலப் பொருள்களில் முதல் மூலப் பொருள்கள் நிலமும் நிலத்திலுள்ள காடுகளும் கடலும் ஆறுகுளங்களுமேயாகும். இன்று நிலம் விலை மதிப்புடையதாகவும், ஆகவே தனி உடைமையாகவும், கருதப்படுகிறது. அதற்கு விலை மதிப்பு ஏற்படுவது அது பண்படுத்தப்பட்ட நிலம் என்பதனாலேயே அதன் உடைமைத் தன்மைக்குக் காரணமும் இவ் வுழைப்பே என்று ஓரளவு கூறலாம். ஏனென்றால் அதை வாங்குபவன் விலைமதிப்புக் கொடுத்தே வாங்குகிறான். ஆனால் அது எப்போதும் உழைத்தவனிடமிருந்து பெற்ற விலை மதிப்பா யிருக்கவேண்டுமென்பதில்லை. குடியேறியவர் பழங்குடியினர் நிலத்தைப் பறித்த காலம் உண்டு. போர்க் காலங்களில் பாதுகாப்புக்காக நிலத்தை வல்லானிடம் ஒப்படைக்கும் பழக்கம் இருந்த காலமும் உண்டு. வல்லார் வழிவந்த நிலத்தின் ஆட்சியே மனித இனத்தில் முதல்முதல் அரசியல் உரிமை ஆகும். ஐரோப்பாவில் 14ஆம் நூற்றாண்டு வரைக்கும், ஆசியாவில் இன்று வரையிலும் நிலவும் ஆட்சிமுறை, சமூக அமைப்பு முறைகளில் வல்லார் வழிவந்த இந்த நில உடைமை யாட்சி முறையின் சின்னங்களைப் பேரளவில் காணலாம்.

கடலின் உப்புக்கு வரி, ஆறு, குளம் ஆகியவற்றின் மீனுக்கு அல்லது சில இடங்களில் நீருக்கு வரி, காட்டுக்குப் பாதுகாப்பு வரி ஆகியவை இதே வகையான அரசியலடிப்படையான உரிமைகளைக் குறிக்கின்றன. நிலம் தனித்தனி மனிதர் கையில் விடப்பட்டதுபோல் இவை விடப்படவில்லை. ஆகவேதான் வை இன்னும் அரசியல்சார்ந்த பொதுவுடைமைகளா யுள்ளன.

மனித சமூகம் முதலில் நாடோடியாகவும் வேட்டுவ வாழ்க்கையுடையதாகவுமே இருந்தது. அடுத்தபடி நாகரிகம் நாடோடியாக இருந்தாலும் ஆங்காங்கே பழக்கப்படுத்தப்பட்ட நாய், ஆடுமாடுகள், குதிரை, கழுதை, கோவேறு கழுதைகள்