உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

23

தங்கமும் வெள்ளியும் மதிப்பீட்டுப் பொருள்களாயினும் அவை சமூக உழைப்பின் மதிப்பீட்டைக் குறிக்கும் சின்னங்களே யன்றித் தனி மதிப்புடையவை அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டும்.

தங்கமும் வெள்ளியும்

பொருள்கள் இயற்கைப் பொருள்கள் என்றும் செயற்கைப் பொருள்கள் என்றும் இருவகைப்படும். இயற்கைப் பொருள்கள் மனிதனுக்கு இயற்கை இலவசமாக அளித்த செல்வங்கள். செயற்கைப் பொருள்கள் மனிதன் உழைப்பால், அதாவது தொழிலாளியின் உழைப்பால் உருவாகியவை. இங்ஙனம் உருவாகியபோதுதான் அவை விலைமதிப்புப் பெற்றுச் சரக்காகின்றன.

ஒரு பொருளைச் சரக்காக்கும் செயலுக்கே நாம் தொழில் என்ற பெயர் கொடுக்கிறோம். அதைச் செய்பவன் தொழிலாளன். செய்வதற்கு வேண்டிய பொருள்களை முதற் பொருள்கள் என்கிறோம்.செயலுக்கு உதவியாய் இருக்கும் பொருள்களை நாம் கருவிகள் என்கிறோம். மேசை செய்பவன் தச்சனானால், மரம் அத்தொழிலுக்குரிய முதற்பொருள். உளியும் சுத்தியும் அவன் தொழிலை எளிதாக்கும் அல்லது விரைவுபடுத்தும் அல்லது செப்பம் செய்யும் கருவிகள்.

முதற் பொருள்களில் பலவற்றுக்கு விலை கிடையாது. கருவிகளிலும் பலவற்றுக்கு விலை இல்லை. கடலிலுள்ள மீன் விதையாது பயிரிடாது விளையும் விளைச்சலாக மீன் படவருக்குக் கிடைக்கின்றது. கொல்லனுலையில் உள்ள துருத்தி வேண்டிய அளவில் காற்றைப் பயன்படுத்திக் கொள்கிறது. நெம்புகோலாகப் பயன்படும் எல்லாக் கருவிகளுக்கும் மூலக் கருவியாகப் பரந்த நிலவுலகம் இலவசமாகப் பயன்படுகிறது. ஆயினும் முதற் பொருள் களுள் பல சமூகத்தில் விலை மதிப்புப் பெற்றுவிட்டன. நெசவாளிக்கு வேண்டிய நூலும் நூற்பவனுக்கு வேண்டிய பஞ்சும் இத்தகைய பொருள்கள். நூல் நூற்பவன் உழைப்பின் பயன்நூல். அதனாலேயே அது விலை மதிப்புப் பெறுகிறது. பஞ்சு பருத்திச் சாகுபடி செய்பவன் உழைப்பின் பயன். அதனாலேயே அது விலைமதிப்புப் பெறுகிறது. இங்ஙனம் விலை மதிப்புப்