உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 45

நாளடைவில் கண்டு கொள்ளப்பட்டது. பொருள்களின் விலைமதிப்பு உயரும்போதும், தாழும்போதும், மதிப்பீட்டுச் சின்னமான பொருளின் அளவும் அவ்வுயர்வு தாழ்வைக் குறிக்கும்படி பேரளவாகப் பெருக்கப்படவும், சிறிதளவாகக் குறுக்கப்படவும் வேண்டும். எனவே, எந்த விகிதத்திலும் அது கூடவோ, குறையவோ தக்க ஒரு நிலையான அளவுடையதாய், அதாவது வடிவற்ற பருமனளவுடையதாய் இருக்கவேண்டும். அத்துடன் விலைமதிப்பின் பெருமித அளவைக் கைப் பழக்கமான சிறுஅளவில் காட்டுவதாயும், எளிதில் மண், நீர், அனல், காற்று, உயிரினம் ஆகியவற்றால் அழிக்கப்பட முடியாததாயும் இருக்க வேண்டும். மேலும் அது எல்லாச் சமூகத்தவருக்கும் கவர்ச்சிகரமான தோற்றமும் பயனும் உடையதாயிருக்க வேண்டும்.பொன் வெள்ளிகளுக்கு இப் பண்புகள் யாவும் உண்டு. ஆகவே பயன் மதிப்பு என்ற அவற்றின் இயல்பான மதிப்பை மறைத்து, விலை மதிப்பு என்ற புதிதான மதிப்பு ஏற்படத் தொடங்கிற்று.

இம்மதிப்பீடு பொன் வெள்ளிக்கு ஏற்பட்ட வகை யாது? அவற்றைச் சுரங்கங்களிலிருந்து எடுப்பதற்கு வேண்டிவந்த உழைப்பு மதிப்பையே இரண்டும் விலையாகபெற்றன. இம் மதிப்புக்குச் சமமான உழைப்பு மதிப்புள்ள பிற பொருள்களின் விலைமதிப்பைக் குறிக்கும் மதிப்பீட்டள வாகவும் அவை பயன்பட்டன. பிற பொருள்களின் மதிப்பீடு உயர்வதையும் தாழ்வதையும் அவை தம் மிகுதியளவு குறையளவுகளால் குறைந்தன. இது அவற்றின் அளவு மதிப்பீடு' ஆனால் பொருள் களிடையே பொருளாக அவற்றின் மதிப்பீடு குறையவும் கூடவும் செய்யும் போது, அவை குறிக்கும் மதிப்பீடும் அந்த விகிதத்தில் கூடவும் குறையவும் செய்யும். இதுவே அவை குறிக்கும் பண்பு மதிப்பீடு.2

பொன், வெள்ளி ஆகிய இரண்டு வகை மதிப்பீடுகளும் உள்ள நாடுகளில், இரண்டின் பண்பு மதிப்பீடுகளிடையே ஒரு அளவை விகிதம் இருப்பதுண்டு. இங்கிலாந்தில் இது வழக்கமாக 1-க்கு 15 என்று அமைக்கப்பட்டது. ஆனால் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் பண்பு மதிப்பீடுகள் முரண்படுவதனால், நாட்டில் பல சமயம் பொருளியல்துறைக் குழப்பம் ஏற்பட்டதுண்டு.